உலகெங்கிலும் ஜைன மதம் அல்லது சமண மதத்தை பின்பற்றுவோரின் முக்கியமான பண்டிகையான மகாவீர் ஜெயந்தி இந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜைன மதம் பின்பற்றுவோருக்கு இது சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும். கடைசி தீர்த்தங்கரரான பகவான் மகாவீய்ன் பிறப்பை இந்த நாள் குறிக்கிறது. ஜைன மதத்தில் இவரை தர்மத்தின் காப்பான் என்றும் ஆன்மிக ஆசிரியர் என்றும் கூறுகின்றனர். மொத்தமுள்ள 24 தீர்த்தங்கரரில் இவர் கடைசி நபர் ஆவார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் சமண மதத்தை பின்பற்றியுள்ளனர். இதன் காரணமாகவே தமிழகத்தில் மகாவீர் ஜெயந்திக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
மகாவீர் ஜெயந்தி 2025
இந்து மத நாட்காட்டியின்படி சைத்ர மாதத்தின் 13வது நாளில் மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாட்களில் மகாவீர் ஜெயந்தி வருகிறது. கிரிகோரிய நாட்காட்டியின்படி மகாவீர் ஜெயந்தி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும். இந்த வருடம் மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 10ஆம் தேதி அமைந்திருக்கிறது. ஜைன மதத்தை தோற்றுவித்தவரான மகாவீரின் பிறப்பை கொண்டாடுவது முக்கியமானதாகும்.
யார் இந்த மகாவீர் ?
பகவான் மகாவீர் 599 பிசி குண்டாகிராம் என்ற பகுதியில் பிறந்தவர். இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இப்பகுதி உள்ளது. சித்தார்த்தா என்ற அரசனுக்கும் திரிஷலா ராணிக்கும் பிறந்தவர். இளம் வயதிலேயே முடி சூடிய மகாவீர் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளார். ஆட்சிக்காலத்தில் ஞானத்திற்காகவும், இரக்க பண்பிற்காகவும் போற்றப்பட்டார். அதன் பிறகு சகல வசதிகளையும் துறந்து ஆன்மிக பாதையில் பயணிக்க தொடங்கினார். இதையடுத்து அவர் ஆன்மிக குருவாகவும் ஜைன மதத்தை தோற்றுவித்தவராகவும் மாறினார்.
இவர் வன்முறைக்கு முற்றிலும் எதிரானவர். அனைத்து உள்ளங்கள் மீதும் இரக்கம் காட்டியவர். கண்களுக்கு தெரியாத உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த வலியுறுத்தியவர். இவருடைய செயல்கள் நாளடைவில் ஜைன மதத்தின் கொள்கைகளாக மாறின. பல வருட தியானத்திற்கு பிறகு ஞானியாக மாறினார்.
மேலும் படிங்கபங்குனி உத்திரம் : முருகனை வழிபட்டு முழு அருளை பெற்றுத் தரும் விரத முறை
மகாவீர் ஜெயந்தி முக்கியத்துவம்
மகாவீர் ஜெயந்தி நாளில் மகாவீரின் போதனைகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. ஜைன மதத்தினர் ஜைன கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவர், மிகவும் எளிமையான ஆடம்பரமற்ற வாழ்க்கையை வாழ வேண்டும் என மகாவீர் வலியுறுத்துகிறார். எந்த சொத்திற்கும் ஆசைப்படாமல் வாழ வேண்டும். இந்த நாளில் ஜைன மதத்தினர் மகாவீரின் சிலையை தேரில் யாத்திரையாக கொண்டு வந்து பஜனைகள் பாடுவர். அதே போல இல்லாதோருக்கு ஜைன மதத்தினர் தொண்டு செய்வதும் உண்டு.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation