திருவண்ணாமலை சிவனை நினைத்தாலே கோடி புண்ணியங்களை அள்ளி தரும் கோவிலைப் பற்றிய வரலாற்று உண்மைகள்

அண்ணாமலையாரை நிலைத்தாலே கோடி புண்ணியம் வந்து சேரும் என்று சொல்லக்கூடிய திருவண்ணாமலை கோவில் பற்றிய உண்மைகளை தெரிந்துகொள்வோம்

Thiruvannamalai temple secrets
Thiruvannamalai temple secrets

இந்து கோவிலில் பிரசித்தி பெற்ற திருவாண்ணமலை அண்ணாமலை கோவிலும் ஒன்றாகும். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக இருக்கிறது. இந்த தலத்தின் மூலவர் அண்ணாமலையாரும், அம்மிகை உண்ணாமுலையார் ஆவர். இந்த கோவில் உருவான கதை என்றால் பிரம்மாவிற்கும் திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் எழ, இடையில் நெருப்புப் பிழம்பாக சிவபெருமான் தோன்றி தன்னுடைய அடியையும் முடியையும் காண்பவரே பெரியவர் என்று செல்ல, அப்படி உருவான வடிவமே லிங்கோத்பவர் என்று அழைக்கப்படுகிறது. அப்படி சிவாபெருமன் திருவடியைக் கண திருமால் வராக வடிவெடுத்தார், அதாவது பன்றி வடிவம் எடுத்து நிலத்தை குடைந்து பல ஆண்டுகள் பயணம் செய்தும் அடியைக் காண முடியாமல் திருமால் திரும்பினார். பிரம்ம அன்ன வடிவெடுத்து கங்கை குடிகொண்ட முடியைக் காண கோடான கோடி வருஷம் பயணித்தும் காண முடியாமல் திரும்பினார். ஆனால் பிரம்ம தாழம்பூவைப் பொய்ச் சாட்சியாக வைத்துக் கண்டதாகப் பொய் கூறினார். இதனால் பிரபாவுக்குக் கோவிலே இல்லாமல் போய்விட்டது. இதனால் போய் கூறியதால் சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் பிரம்மர், நடுப்பாகத்தில் திருமால், மேல்பாகத்தில் சிவனும் நின்று சிவலிங்கமாகத் தோன்றினர். தன்னை நோக்கித் தவம் இருந்த பார்வதியை இடப்பாகத்தில் அமர்த்தி அர்த்தநாரீஸ்வரராய் நின்ற பெருமைக்கு உரிய தலம் திருவாண்ணமலையாகும்.

thiruvannamalai history inside

இந்த தலத்தில் நால்வர் இன்று அழைக்கப்படுபவர் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் இவர்கள் அனைவரும் தேவாரம் பதிகங்களைப் பாடியுள்ளனர். இங்கு குடிகொண்டிருக்கும் முருகப் பெருமானுக்கு அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இதனால் இந்த மலையே சிவபெருமான் என்று நம்பப்படுகிறது. இதனால் இந்த மலையை வலம் வருகின்றனர் மக்கள். இந்த மலையை வளம் வருவது கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது. முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது நம்பப்படுகிறது.

திருவண்ணாமலை கோவிலைச் சுற்றி ஒளிந்திருக்கும் ரகசியங்களை தெரிந்திக்கொள்வோம்

  • திருவண்ணாமலை சுற்றி 108 சிவலிங்கங்களைப் புதைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சிவலிங்கங்களைச் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
thiruvannamalai temple inside
  • ஆனால் மக்கள் கிரிவல பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களை வழிப்படுவார்கள்.
  • திருவண்ணாமலை யுகங்கள் யுகங்களாக அழியாமல் இருப்பதாகக் சொல்லப்படுகிறது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி இருப்பதாக நம்பப்படுகிறது.
thiruvannamalai temple new inside
  • 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் 6 பிரகாரங்களையும் 9 ராஜகோபுரங்களையும் கொண்டுள்ளது. இந்த கோவிலில்142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த கோவிலின் சிறப்பு பெற்ற கார்த்திகை மாத மகாதீபம். இந்த கார்த்திகை மாத தீபத்திருவிழா பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழாவாக அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது
  • திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். இது போன்று பல எண்ணிலடங்க விஷயங்களைச் சொல்லிக்கொண்டே சிவன் புகழ் பாடும் இடமாக இருக்கிறது திருவண்ணாமலை.

கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதை உங்கள் சமூக ஊடகக் கைப்பிடிகளில் பகிர மறக்காதீர்கள். மேலும் இதுபோன்ற கதைகளைப் படிக்க ஹர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Image Credit- freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP