Vinayagar Chaturthi 2024 : வேண்டியதை வேண்டிய வண்ணம் தரும் விநாயகரின் சிலை வாங்கும் நேரம் ? வழிபடும் முறை...

விநாயகர் சதுர்த்தி எப்போது சிலை வாங்க வேண்டும் ? வழிபடும் முறை மற்றும் கரைக்கும் இடம் உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்...

ganesh chaturthi festival

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான கடவுளாக விநாயகர் விளங்குகிறார். நம்முடைய துயரங்களை சரி செய்யக்கூடியவர். சிவன், விஷ்ணுவை விட விநாயகரை திரும்பும் திசைகளில் எல்லாம் பார்க்க முடியும். அனைவரது வீட்டிலும் விநாயகர் நிச்சயம் இடம்பெற்றிருப்பார். தினந்தோறும் விநாயகரை வழிபட்டாலும் சதுர்த்தி அன்று வழிபடுவது மிகவும் விசேஷமாகும். விநாயகரை பிரமாண்டமாக கொண்டாடும் நாள் தான் விநாயகர் சதுர்த்தி. இந்த கொண்டாட்டத்தில் எப்போது விநாயகர் சிலை வாங்க வேண்டும் ? களிமண் பிள்ளையாரா அல்லது ரசாயன பிள்ளையாரா ? எப்போது பூஜை செய்ய வேண்டும் ? எங்கு கரைக்க வேண்டும் ? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளின் பதில் இங்கே...

vinayagar chaturthi

விநாயகர் சதுர்த்தி நாள் & நேரம்

இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு இரண்டு முக்கிய பின்னணி உள்ளது. அக்காலத்தில் தொழில் சார்ந்த வாழ்வியலே பெரும்பாலும் இருந்தது. ஊர் கூடி தேர் இழுத்தால் தான் திருவிழா என்பதற்கு ஏற்ப தொழில் செய்வோரின் வாழ்வியலுக்காக உருவாக்கபட்ட பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. உலக நன்மையும் இதில் அடங்கியிருக்கிறது. நீர்நிலைகளில் மண் அரிப்பை களிமண் கொண்டு சரி செய்ய முடியும். விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகள் வாங்கி வழிபட்டு மூன்று நாட்கள் கழித்து குளம், ஏரி, ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் கரைக்கும் போது அங்கு மண் அரிப்பை தடுக்க முடியும். இதை புரிந்துகொள்ளாமல் தமிழகத்தில் குழி வெட்டி அங்கு நீர் நிரப்பி சிலைகளை கரைக்கின்றனர்.

இந்தாண்டு சதுர்த்தி வெள்ளிக்கிழமை அன்றே தொடங்கி விடுகிறது.

நேரம்

6-9-2024 மதியம் 1.48 மணி

7-9-204 மாலை 3.38 மணி வரை சதுர்த்தி திதி அமைந்திருக்கிறது.

சிலை வாங்கும் நேரம்

சதுர்த்தி வெள்ளிக்கிழமை தொடங்குவதால் அன்று மாலை 4:30 மணிக்கு மேல் சிலை வாங்கலாம்.

சனிக்கிழமைக்கான நேரம்

காலை 7 மணி முதல் 8:50 மணி சிலை வாங்கி வழிபடலாம்

காலை 10.35 மணி முதல் மதியம் 1.20 மணி வரை

விநாயகர் சதுர்த்தி அன்று மாலை நேரத்தில் வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். வெள்ளிக்கிழமை சிலை வாங்கினால் இரண்டு பழங்கள் வைத்து நெய் வேத்தியம் செய்யவும்.

வழிபடும் முறை

பலகையில் விநாயகரை வைத்து எருக்கம் பூ மாலை அணிவித்து சுற்றி அருகம்புல் வைத்து விளாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம், அவல், சுண்டல், பொறிகடலை, கொழுக்கட்டை, வெள்ளம் கொண்டு நெய் வேத்தியம் செய்து அர்ப்பணிக்கவும். அதன் பிறகு வேண்டியதை வேண்டிய வண்ணம் தரும் விநாயகரை உள்ளன்போடு வழிபட்டு பலன் பெறவும்.

விசர்ஜன நேரம்

மூன்று நாட்கள் கழித்து திங்கட்கிழமை அன்று எமகண்டம், ராகு காலம் தவிர்த்து மாலை 6 மணிக்கு உட்பட்டு சிலைகளை கட்டாயம் நீர்நிலைகளில் கரைக்கவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP