பெண்கள் தங்க கொலுசு, தங்க மெட்டி அணியலாமா ? தவிர்ப்பதற்கு சொல்லப்படும் பின்னணி என்ன ?

தங்கக் கொலுசு அணிய விரும்பும் பெண்களுக்கான முக்கிய பதிவு இது. ஏன் தங்கக் கொலுசு அணியக் கூடாது என பெரியவர்கள் சொல்லும் காரணங்கள் இங்கே...

can women wear gold anklets
can women wear gold anklets

பொதுவாக தங்க அணிகலன் அணிவதில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் விருப்பம். தங்கம் அணிவதில் அலாதி பிரியம் கொண்டவர்களாக பெண்களை குறிப்பிடலாம். ஆதிகாலத்தில் இருந்து தற்போது வரை தங்கத்தின் மீதான மோகம் பெண்களுக்கு குறைந்ததில்லை. தங்கத்தில் எந்த அணிகலன் அணிந்தாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் காலில் தங்கக் கொலுசு, மெட்டி அணிய விருப்பம் உள்ளது என்று சொன்னால் வீட்டின் பெரியவர்கள் உடனடியாக தடை போட்டு விடுவார்கள். இதெல்லாம் பிற்போக்கு சிந்தனை என இந்த தலைமுறையினர் நினைக்கலாம். ஆனால் அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் நம் முன்னோர்கள் பலவற்றை ஆராய்ந்து எது சரி, தவறு என உலகிற்கே விளக்கியுள்ளனர்.

gold anklet

பெரியவர்கள் சொல்லும் காரணம் என்ன ?

தங்கம் என்பது மகாலட்சுமிக்கு சமமானது. இது உயர்ந்த நிலையில் வைத்து வழிபடக்கூடிய அற்புதமான உலோகம். எனவே அதை மரியாதை குறைவாக காலில் போடக் கூடாது என பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம்.

காலில் தங்கம் அணியக் கூடாது என சொல்வதற்கு இது மட்டுமே காரணமா ?நம்முடைய உடல் இயக்கம் என்பது சூடு, குளிர்ச்சியை சமமாக கொண்டு வாதம், பித்தம், சிலேத்துமம் சரியான விகிதத்தில் இயங்க வேண்டும். இந்த நாடிகள் சரியாக இயங்கினால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதன் தொடர்பாக வரும் நன்மை தீமைகளை நம்முடைய உடல் அனுபவித்து சீராக வைத்து பாதுகாக்கிறது.

நமது உடல் தட்ப வெப்பநிலைக்கு ஏறும் மாறும் தன்மை கொண்டது. சில உலோகங்களை அணியும் போது அவற்றின் தன்மை நம்முடைய உடலின் தட்ப வெப்பநிலையை மாற்றும் தன்மையுடன் விளங்குகிறது.

தங்க உலோகத்தின் தன்மை என்பது குளுமை. தங்கத்தை காது, கை, கழுத்தில் அணியும் போது உடலில் குளுமை ஏற்படுகிறது. குளுமை தரக்கூடிய தங்கத்தை காலில் தொடர்ந்து அணிவதால் உடலில் வாதம் மிக அதிகமாகும். வாதம் அதிகரித்தால் உடல் பருமன் ஏற்படும். கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோம். எனவே குளுமை தன்மை கொண்ட தங்கத்தை காலில் அணிவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிங்ககோலமிட்டு வீட்டின் முதல் தர்மத்தை தொடங்கி வைக்கும் பெண்கள்! கோலம் போடுவதன் முக்கியத்துவம்...

அதுவே வெள்ளி உலோகத்தால் தயாரிக்கப்பட்ட மெட்டி உடலில் சூடு கொடுத்து வாதத்தை சம நிலையில் வைக்கும். இவை மட்டுமல்ல கால் சனி கிரகத்துடனும், தங்கம் குரு கிரகத்துடனும் தொடர்புடையது. கிரகங்களில் பகை கொண்ட உலோகத்தை நாம் அணிவதால் கிரகத்தினால் ஏற்படும் துன்பங்களை நாம் அனுபவிக்க நேரிடும். எனவே முன்னோர்களின் பேச்சை கேட்பது நல்லது.

இதுபோன்ற ஆன்மிகம் சார்ந்த கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP