தமிழர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை போன்றவற்றில் ஏதாவது ஒரு தர்மம் இருப்பதாகவே நம்முடைய முன்னோர் நமக்கு கற்று தந்துள்ளனர். இன்றைய தலைமுறையினருக்கு நாம் பண்பாட்டு விஷயங்களையும், வாழ்க்கை முறையையும் சொல்லித் தர தவறினால் எதிர்காலத்தில் பண்பாட்டு விஷயங்கள் ஏன் எதற்காக கடைபிடிக்கப்பட்டன என்று தெரியாமல் போய்விடும். அப்படி மறைந்து வரக்கூடிய பண்பாட்டு விஷயங்களில் காலையில் எழுந்து கோலம் போடுவது. இன்றைய தலைமுறை பெண்களுக்கு காலையில் எழுந்திருப்பதே கடினமான விஷயம் ஆகிவிட்டது. அதையும் தாண்டி வாசல் தெளித்து கோலம் போடுதை சிரமமாக நினைக்கின்றனர்.
அக்காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்திருக்க கூடியவர்கள் பெண்கள். வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு வெறும் தண்ணீர் இல்லாமல் அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் அரைத்து கரைத்து சேர்த்து வாசல் தெளிப்பது அவசியம். அதன் பிறகு முக்கியமாக பச்சரிசி மாவினால் கோலமிடுங்கள். கல் பயன்படுத்தி கோலமிடுவது தவறு.
கோலம் பற்றிய புரிதல்
கோலம் அழகிற்காக மட்டும் போடுவது அல்ல. கோலம் தர்மத்திற்காக போடப்படுகிறது. தமிழர்களுக்கு ஒரு வாழ்க்கை முறை உண்டு. அன்றாடம் நாம் சாப்பிடுவதற்கு முன்பு ஏதேனும் ஒரு உயிருக்கு உணவளித்து சாப்பிட வேண்டும். நடைமுறையில் இது எந்த அளவிற்கு சாத்தியம் என யோசியுங்கள். தினமும் ஒரு நபரை தேடி உணவளிக்க முடியுமா என்பது சற்று சாத்தியமில்லாதது.
எனவே தான் அந்தக் காலத்தில் முன்னோர் மிக அழகாக காலையில் பச்சரிசி கோலமிடுவதால் அவ்வழியே செல்லும் எறும்பு, காகம், குருவி ஆகிய உயிரினங்கள் அவற்றை சாப்பிட்டு பசி அடங்கும். உணவளிப்பதும் ஒரு தர்மமே.
எறும்பு தின்னால் கண் நன்றாக தெரியும் என பழமொழி உண்டு. இது எதை குறிப்பிடுகிறது என்றால் எறும்பின் கண்கள் நகர்வதற்காக பயன்படுகின்றன. உணவைத் தேடுவதற்காக பயன்படுவது கிடையாது. எறும்பு தனக்கான உணவை நுகர்ந்தே தேடிக் கொள்கிறது. எனவே எறும்புக்கு உணவு கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியம் நம்முடைய கண் பார்வையை நன்றாக்கும் என சொல்லப்பட்டது. எறும்பு தின்றால் என்பது எறும்பை சாப்பிடுவது அல்ல... எறும்பு தின்னால்
காலையில் எழுந்தவுடன் நாம் செய்யக்கூடிய முதல் தர்மம் கோலமிடுதல். பெண்களே வீட்டின் முதல் தர்மத்தை தொடங்கி வைக்கின்றனர். அதனால் தான் கோலமிட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. குட்டி குட்டியான ஆயிரம் உயிர்களுக்கு உணவிடும் புண்ணியத்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கிறது.
மேலும் படிங்கவைர ஆபரணம் அணிவது நல்லதா ? யாரெல்லாம் வைரம் அணியக் கூடாது ?
எப்போது கோலம் போடக் கூடாது ?
- அமாவாசை
- திதி கொடுக்கும் நாள்
அதுமட்டுமின்றி பெண்கள் வாசல் கூட்டி, தெளித்து, குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதே நல்ல உடற்பயிற்சி. கோலமிடுதல் உடல் ஆரோக்கியத்திற்கும், மன நிறைவை தந்து மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
கோலம் போடுவதால் வீட்டிற்கு தர்மம் சேர்த்து, புண்ணியமும் அதிகரிக்கிறது. இதை கட்டாயம் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation