ஆடிப் பூரம் 2024: குழந்தை வரம், திருமணம் கைகூட ஆடிப்பூர நாளில் அம்மன் வழிபாடு! நல்ல நேரம் & பூஜை

குழந்தை வரம், திருமணம் கைகூடுவதற்கு ஆடிப்பூர நாளில் அம்மனை வழிபட்டால் அடுத்த ஆண்டிற்குள் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும்.

aadi pooram rituals
aadi pooram rituals

ஆடிப்பூர நாளில் இரண்டு விஷயங்களுக்காக அம்மனை வழிபடுவது தொன்று தொட்ட ஐதீகம். ஆடிப்பூரத்தில் திருமணம் கைகூடுவதற்கு அம்மனை வழிபட்டால் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற்று தம்பதியாக அம்மன் முன் நிற்பீர்கள். குழந்தை பாக்கியம் வேண்டி அம்மனை வழிபட்டால் அடுத்த வருடம் குழந்தையோடு அம்மன் பாதத்தில் நிச்சயம் குழந்தையை வைப்பீர்கள். அந்தளவிற்கு அம்மனின் அருளை பரிபூரணமாக பெற்றுத் தரும் நாள் இந்த ஆடிப்பூரம். வேண்டுதல் நிறைவேறியவர்கள் அம்மனை தவறாமல் வழிபடுங்கள்.

aadi pooram time

பூரம் நட்சத்திரம்

ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6.42 மணி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி 9.30 வரை

ஆடிப்பூரம் வழிபடும் நாள் & நேரம்

  • 7-08-2024 : காலை 6 மணி முதல் 7.15 மணி வரை
  • 9.05 மணி முதல் 10.20 மணி வரை

வேலைக்கு 8 மணிக்கே புறப்படும் நபர்கள் முதல் நேரத்தை பயன்படுத்தி அம்மனை வழிபடலாம். தாமதமாக செல்பவர்கள் இரண்டாம் நேரத்தை பயன்படுத்தலாம்.

  • குழந்தை வரம், திருமணத்திற்காக காத்திருக்கும் நபர்கள் ஒரு மரப்பலகையில் கோலமிட்டு சிவப்பு துண்டு விரித்து அதில் அம்மனின் திருவுருப் படத்தை வைக்கவும்.
  • சுற்றி சந்தனம், குங்குமம், மஞ்சள், பூ ஆகிய மங்கலப் பொருட்களை தாம்பூலத்தில் வைத்து அம்மனுக்கு நலங்கிடுங்கள்.
  • இதையடுத்து கருணையின் வடிவமான அம்மனின் ஸ்லோகம் படிக்கவும். அம்மனின் பாதத்தில் அட்சதை போட்டு திரு உருவப்படத்திற்கு வளையல் மாலை அணிவிக்கவும்.
  • இதன் பிறகு அம்மன் படத்தை பூஜை அறையிலேயே வைக்கவும். மரப்பலகையை கிழக்கு மேற்கு திசையில் வைத்து சிவப்பு துணிக்கு பதிலாக வெள்ளை நிற துணி போட்டு யாருக்கு திருமணம் நடக்க வேண்டுமோ, குழந்தை வரன் வேண்டுமோ அவர்களை அந்தப் மரப்பலகையில் அமர வைத்து கைகளில் கண்ணாடி வளையல் போட்டு உறவினர்களை வாழ்த்தச் சொல்லுங்கள்.
  • அடுத்ததாக அவர்களை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று அம்மனை வழிபடச் சொல்லுங்கள்.
  • உறவினர்கள் இல்லாத பட்சத்தில் கணவரே தனது மனைவிக்கு இந்த சடங்குகளை செய்யலாம்.
  • இறுதியாக கோவிலுக்கு சென்று டஜன் வளையல் வாங்கி அம்மனுக்கு கொடுங்கள். அங்கு வரும் பெண்களுக்கு வளையல் தானம் செய்யுங்கள். கோவிலில் உள்ள மரத்தில் குழந்தை வரன் வேண்டி தொட்டில் கட்டவும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP