இந்த உலகமே பஞ்ச பூதங்களின் செயல்களால் இயங்கி கொண்டிருக்கிறது. இதில் நீர் முக்கியமானது. நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு என்ற திருக்குறளே நீருக்கு வள்ளுவர் அளித்த சான்றாகும். உலக இயக்கத்திற்கும் மனித சமுதாயத்தின் இயக்கத்திற்கும் நீர் முக்கியமானது. பல நூற்றாண்டுகளாக நம் முன்னோர் கற்றுக் கொடுத்ததன் அடிப்படையில் தண்ணீரை தெய்வத்திற்கு இணையாக ஒப்பிட்டு மதித்து நதிகளுக்கு பூஜை செய்கிறோம். அந்த வகையில் அமைந்ததே ஆடி 18.
ஆடி 18 வழிபாட்டின் முக்கியத்துவம்
தமிழகத்தில் வாழ்ந்த பெரும்பாலான மக்களின் வாழ்வியல் முறை விவசாயத்தை மையமாக கொண்டது. இன்னும் சொல்ல போனால் நம் முன்னோர்கள் அனைவரும் விவசாயிகளே. விவசாயம் செய்வதற்கு தண்ணீர் பிரதானமாகும். விவசாயிகல் தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் மாதமே ஆடி மாதம். இந்த ஆடி மாதத்தில் தமிழகத்தின் அநேகமான இடங்களில் மழை பெய்யும். கிராமங்களில் ஆடி மாத கொடி கட்டினால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழா நடைபெறுகிறது.
ஆடி மாதத்தில் அனைத்து ஊர்களுக்கும் தண்ணீர் சென்று நதிகள், ஏரிகள், குட்டைகள், குளம் நிரம்ப குறைந்தது 15-16 நாட்கள் ஆகும். இதையடுத்தே ஆடி 18 பெருக்கு கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு நன்றி சொல்லும் நாளாகவும் ஆடி 18 பார்க்கப்படுகிறது.
விவசாயம் மட்டுமின்றி அதை சார்ந்த தொழில் செய்வோருக்கும் வளமான வாழ்வு அமைந்திட இந்த ஆடி 18 விரத நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. ஆடி 18ல் காவிரி தாயை வழிபட்டால் சகல விதமான தெய்வங்களின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். பலரும் இந்நாளில் நதித்துறைக்கு சென்று அன்னை காவிரிக்கு நன்றி செலுத்துகின்றனர்.
காவிரியில் புனித நீராடி வழிபாடு செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும். இல்லங்களிலும் காவிரி தாயை வழிபடலாம். கலசத்தில் நீர் நிரப்பி மஞ்சள் தூள் போட்டு இரண்டு பூ வைத்து அந்த நீரை காவிரியாக பாவித்து வழிபடுங்கள். இது நீண்டகால வரைமுறை ஆகும்.
புதிதாக திருமணம் செய்வதவர்களுக்கு ஆடி 18 வரப்பிரசாதமான நாளாகும். இந்த நாளில் திருமாங்கல்யத்தை அம்மனின் பாதத்தில் வைத்து பூஜை செய்தால் கணவனின் ஆரோக்கியம் மேம்படும் சுமங்கலியாக வாழலாம். தாலி சங்கிலி கொண்டவர்கள் கழுத்தில் கயிறு மாற்றிக் கொண்டு தாலி சங்கிலியை கழுவி சுத்தம் செய்து அம்மனின் பாதத்தில் வைத்து பூஜை செய்யுங்கள்.
ஆடி 18 தாலி மாற்றும் நேரம்
ஆக.3 தேதி
காலை 7.35 முதல் 8.50 வரை
10.35 முதல் 11.55 வரை
காவிரி ஆற்றுக்கு சென்று வழிபட நினைப்பவர்கள் குட்டி பிள்ளையார் செய்து காவிரி நீரை நிரப்பி வழிபட்டு பெரியோரிடம் ஆசிர்வாதம் வாங்கலாம். வீடுகளில் தண்ணீர் எடுக்க பயன்படுத்தும் மோட்டார், கிணறு ஆகியவற்றுக்கு மஞ்சள் பூசலாம். அம்மன் பூஜைக்கு பயன்படுத்தும் தண்ணீரை மரம், செடி மீது ஊற்றலாம். இந்த நாளில் எந்தவொரு புதிய செயலையும் தொடங்குவது நல்லது.
இதுபோன்ற ஆன்மிக கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation