இரத்த சோகை என்று கூறப்படும் அனீமியா என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது ஏற்படும் ஒரு நிலை. குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் இந்தப் பிரச்சினை அடிக்கடி காணப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கிறது. இந்த நிலைக்கு முக்கிய காரணங்கள் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் B12 குறைபாடுகளாகும். இவற்றில் மிகவும் பொதுவானது இரும்புச்சத்து குறைபாடு ஆகும். இரத்த சோகை இருந்தால், குறைந்த எடையுடன் குழந்தை பிறக்கும் அபாயம் அல்லது குறைப் பிரசவம் நிகழும் வாய்ப்பு உள்ளது. எனவே, கர்ப்பகாலத்தில் இரத்த அளவை பராமரிப்பது அவசியம். இரத்த சோகையைத் தடுக்கும் சில முக்கியமான உணவுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இரும்புச்சத்து என்பது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு முக்கியமானது. இரும்புச்சத்து இல்லாவிட்டால், இரத்தம் போதுமான அளவு ஆக்ஸிஜனை சுமக்க முடியாது. கர்ப்பிணி பெண்கள் தினமும் 18-27 mg இரும்புச்சத்தை உட்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்:
ஃபோலிக் அமிலம் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. கர்ப்பகாலத்தில் இதன் பற்றாக்குறை கருவின் வளர்ச்சியை பாதிக்கலாம். கர்ப்பிணிகளுக்கு தினசரி 400-600 mcg ஃபோலிக் அமிலம் தேவைப்படுகிறது. இது அதிகம் உள்ள உணவுகள்:
வைட்டமின் B12 இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு அவசியம். இது முக்கியமாக அசைவ உணவுகளில் கிடைக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு இது தினசரி 2.6 mcg தேவைப்படுகிறது. வைட்டமின் B12 நிறைந்த உணவுகள்:
மேலும் படிக்க: 40 வயதில் கர்ப்பம்; பக்க விளைவுகள் என்ன? கண்டிப்பாக இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க
கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து உடலில் நன்றாக உறிஞ்சப்பட வைட்டமின் C உதவுகிறது. எனவே, இரும்புச்சத்து உள்ள உணவுகளுடன் வைட்டமின் C உணவுகளை சேர்த்து உண்ண வேண்டும். வைட்டமின் C நிறைந்த உணவுகள்:
கர்ப்ப காலத்தில் ரத்த அளவை அதிகரிக்க தண்ணீர் அதிகம் குடிப்பது அவசியம். அதேநேரம் டீ, காபி போன்றவை இரும்புச்சத்து உறிஞ்சுவதை தடுக்கின்றன. எனவே, இவற்றை உட்கொள்ளும் போது உணவுடன் சேர்த்து குடிக்காமல் இடைவெளி வைக்க வேண்டும்.
கர்ப்பகாலத்தில் சத்தான உணவு முறை இரத்த அளவைப் பராமரிக்க உதவுகிறது. இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் B12 மற்றும் C ஆகியவற்றை சரியான அளவு சேர்த்து சாப்பிட வேண்டும். மேலும், வழக்கமான மருத்துவ சோதனைகளை செய்ய தவறாதீர்கள்.
Image source: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com