herzindagi
tamil nadu women candidates

Women Candidates : பெண் உரிமை பேசும் தமிழகத்தில் 76 பெண் வேட்பாளர்கள்! சம உரிமை எங்கே ?

பெண் உரிமை பேசும் கட்சிகள் இனி தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் தேர்தல் அரசியலில் சம உரிமை கேள்விக்குறியாக இருக்கிறது.
Editorial
Updated:- 2024-04-17, 08:40 IST

பெண்களின் முன்னேற்றமே சமூக முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் என உரக்க கூறினாலும் சமுத்துவத்தை பின்பற்றுவதில் அரசியல் கட்சிகள் பாரபட்சம் காட்டுவதாகவே தெரிகிறது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் 39 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களின் விவரத்தை அரசியல் கட்சி வாரியாக பார்க்கலாம். 39 தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் அதில் 76 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் ஆவர்.

women candidates in tamil nadu

நாம் தமிழர் கட்சி

ஆட்சி அதிகாரத்தில் இல்லாத கட்சி என்றாலும் தேர்தல் அரசியலில் பெண்களுக்கு சம உரிமை என்ற அடிப்படையில் புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளில் பாதி அளவிற்கு  அதாவது 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.

  • காளியம்மாள், மயிலாடுதுறை
  • அமுதினி, வட சென்னை
  • தமிழ்ச்செல்வி, தென் சென்னை
  • அப்ஷியா நஸ்ரின், அரக்கோணம்
  • வித்யா வீரப்பன், கிருஷ்ணகிரி
  • அபிநயா பொன்னிவளவன், தருமபுரி
  • பாக்கியலட்சுமி, ஆரணி
  • கனிமொழி, நாமக்கல்
  • சீதாலட்சுமி, திருப்பூர்
  • கலாமணி ஜெகநாதன், கோவை
  • தேன்மொழி, பெரம்பலூர்
  • ஜான்சிராணி, சிதம்பரம்
  • கார்த்திகா, நாகைப்பட்டினம்
  • எழிலரசி, சிவகங்கை
  • சத்யாதேவி, மதுரை
  • சத்யா, நெல்லை
  • சந்திர பிரபா, ராமநாதபுரம்
  • ரூத் ஜேன், தூத்துக்குடி
  • மரிய ஜெனிபர், கன்னியகுமரி
  • மேனகா, புதுச்சேரி

திமுக 

சமத்துவம், சமூக நீதி, பெண் உரிமை பேசும் ஆளும் கட்சியான திமுக மூன்று பெண் வேட்பாளர்களை மட்டுமே களம் இறக்கியுள்ளது

  • கனிமொழி, தூத்துக்குடி
  • தமிழச்சி தங்கபாண்டியன், தென் சென்னை
  • ராணி ஸ்ரீ குமார், தென்காசி

பாஜக

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தமிழகத்தில் மூன்று பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

  • தமிழிசை செளந்தரராஜன், தென் சென்னை
  • ராதிகா சரத்குமார், விருதுநகர்
  • கார்த்தியாயினி, சிதம்பரம்

பாமக

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக போட்டியிடும் பத்து தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

கவிஞர் திலகபாமா, திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டியில் பிறந்த இவர்  பாமகவின் பொருளாளராக உள்ளார். மது ஒழிப்பு, பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக போராடிய திலகபாமா முதன்முறையாக திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

  • செளமியா அன்புமணி, தருமபுரி
  • ஜோதி வெங்கடேஷ், காஞ்சிபுரம்

காங்கிரஸ்

தேசிய கட்சியான காங்கிரஸ் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இரண்டு பெண் வேட்பாளர்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகின்றனர்.

  • ஜோதிமணி, கரூர்
  • சுதா, மயிலாடுதுறை

அதிமுக 

இரண்டு பெண் முதலமைச்சர்களை உருவாக்கிய அதிமுக ஒரே ஒரு பெண் வேட்பாளரை மட்டுமே இந்த தேர்தலில் களமிறக்கியுள்ளது.

ஜான்சிராணி, நெல்லை

இவர்களை தவிர்த்து 36 பெண் வேட்பாளர்கள் தமிழகத்தில் போட்டியிடுகின்றனர். இதில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் விவசாயி, பொறியாளர், மருத்துவர், எழுத்தாளர் என அடையாளம் உண்டு. மக்கள் பணி செய்ய விரும்பும் இவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com