அறிவியலுக்கு அப்பாற்பட்டு உலகில் பல விஷயங்கள் நிகழ்ந்துள்ளன. கோடியில் ஒருவருக்கு நாம் நினைத்து பார்க்க முடியாத சக்தி இருக்கும். டிஸ்கவரி சேனில் மின்சாரத்தை உடலில் கடத்தும் மனிதர், காந்த சக்தி போல் ஈர்க்கும் பண்புடைய நபர்களை பார்த்திருப்போம். அப்படியான நபர்களில் ஒருவர் இந்த டோரதி அலிசன். அமெரிக்காவை சேர்ந்த டோரதி அலிசன் காவல்துறையில் பணி செய்யாத போதிலும் பல குற்ற வழக்குகளை தனித்திறனால் முடித்து வைத்துள்ளார். யார் இந்த டோரதி அலிசன் ? வாருங்கள் இந்த பதிவில் பார்ப்போம்.
14 வயதில் டோரதி அலிசன் தனது தந்தையின் உயிரிழப்பை கணித்திருந்தார். யாரும் நம்பாத நிலையில் ஒரு வாரம் கழித்து அவர் சொன்னது போலவே நிமோனியாவால் தந்தை இறந்துபோனார். டோரதி அலிசனின் செயல் அவருக்கு சூனியக்காரி என்ற பட்டத்தை நண்பர்களிடம் இருந்து பெற்றுத் தந்தது. டோரதி அலிசன் சொன்ன விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கவே அவர் சொல்லுவதை பிறர் நம்பத் தொடங்கினர். டோரதி அலிசனின் தனித்திறனை கடவுளின் பரிசாக கருதிய அவரது அம்மா அதை நற்காரியங்களுக்கு பயன்படுத்த அறிவுறுத்தினார்.
தாயாரின் பேச்சை கேட்டு காவல்துறைக்கும், சட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்கும் உதவ தொடங்கினார். 30 ஆண்டு பணியில் காணாமல் போன பல குழந்தைகளை கண்டுபிடிக்க உதவியும், சிக்கலான குற்ற வழக்குகளை தீர்த்தும் வைத்துள்ளார். இதற்காக டோரதி அலிசன் ஒரு முறை கூட பணம் வாங்கியதில்லை. பயண செலவுகளுக்கு மட்டுமே பணம் பெற்றுக் கொள்வார். அமெரிக்காவில் மட்டுமல்ல உலகளவில் 5 ஆயிரம் வழக்குகளை தீர்க்க உதவியுள்ளார்.
1967ல் டோரதி அலிசன் காவல்துறையிடம் தனது கனவில் சிறுவன் ஒருவன் மூழ்கி கிடப்பதாக கூறியுள்ளார். ஒரு மாத இடைவெளியில் அலிசன் சொன்னது போலவே குளத்தில் மூழ்கி உயிரிழந்திருந்தான். 1974ல் கடத்தப்பட்ட பெண் ஒருவரை மீட்க உதவ வேண்டும் என அலிசனை நாடியுள்ளனர். அவர் கடத்தப்படவில்லை நியூ யார்க் நகரில் மறைந்து கொண்டு இருப்பதாக கூறினார். டோரதி அலிசனின் உதவியை பெற நட்லி காவல்துறைக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன.
1979ல் டோரதி அலிசன் தன்னைப் பற்றி A Psychic story என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். பலரும் டோரதி அலிசனின் தனித்திறமை மீது நம்பிக்கை கொண்டிருந்த போதிலும் அவர் அதை மறுக்கவும் செய்துள்ளார். டோரதி அலிசன் ஆயிரக்கணக்கான வழக்குகளில் உதவினாலும் அவர் மீது சந்தேகமும் இருந்ததுள்ளது.
1980ல் அட்லாண்டாவில் ஏழு கருப்பின குழந்தைகளின் கொலை பற்றி கண்டுபிடிக்க காவல்துறை அவரது உதவியை நாடியது. குற்றவாளி யார் என 42 பெயர்களை டோரதி கொடுத்துள்ளார். இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குற்றவாளிக்கும் டோரதி சொன்ன குற்றவாளிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
குடும்பத்தாரிடம் தனது 75வது பிறந்தநாளை கொண்டாட வாய்ப்பில்லை என கூறியிருந்தார். அது போலவே 74வயதில் இதய நோய் காரணமாக உயிரிழந்தார். அறிவியலுக்கு அப்பாற்பட்டு உலகில் சில மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு டோரதி அலிசன் ஒரு உதாரணமானவர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com