herzindagi
image

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் பெண்ணின் கருத்தரித்தல் வாய்ப்பு பாதிக்குமா ? குழந்தையின் உயிருக்கு ஆபத்தா ?

ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் புகைப்பிடிப்பதால் அவர்களுக்கு கருத்தரிப்பது அதாவது கர்ப்பம் அடைவதில் பிரச்னை உண்டாகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தால் பெண் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு பாதிக்கப்படுமா ? குழந்தையின் உயிருக்கு ஆபத்து உள்ளதா ? போன்ற விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2025-07-29, 16:44 IST

சமீபத்தில் வெளியான குட் வைஃப் வெப் தொடரில் பிரசவத்திற்கு மனைவி காப்பீடு செய்திருந்தும் கணவனுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக காப்பீடு வழங்க தனியார் நிறுவனம் மறுத்திடும். ஏனெனில் அப்பெண்ணின் கணவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு. இதன் பின்னணியில் மருத்துவ ரீதியிலான காரணங்கள் உண்டு. புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது நமக்கு தெரியும். பெண் கருத்தரிப்பதிலும், பிரசவத்திலும் பாதிப்பை ஏற்படுத்துமா ? புகைப்பிடிக்கும் பழக்கத்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து உண்டா ? போன்ற விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

how smoking impacts women fertility

புகைப்பிடிப்பதால் பெண்ணுக்கு கருத்தரிப்பதில் பாதிப்பு

குழந்தை பிரசவிக்க விரும்பும் பெண்கள் உடனடியாக புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். புகைப்பழக்கத்தை நிறுத்தினால் அப்பெண் கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். புகைப்பழக்கத்தால் கர்ப்பத்தில் பெண்களுக்கு ஏற்படும் சில பாதிப்புகள்...

  • கருச்சிதைவு
  • எக்டோபிக் கர்ப்பம்
  • குறைப்பிரசவம்
  • குழந்தை இறந்து பிறப்பது

இதில் எக்டோபிக் கர்ப்பம் என்பது கருவுற்ற முட்டை கருப்பையில் வளராமல் வேறு இடத்தில் வளரும். அதே போல புகைப்பிடிக்கும் காரணத்தால் SIDS என்று சொல்லக்கூடிய குழந்தை பிறந்த பிறகு எப்போது வேண்டுமானலும் இறக்க வாய்ப்புண்டு. ஆரோக்கியமான குழந்தையாக இருந்தாலும் எதிர்பாராதவிதமாக உயிரிழக்க கூடும்.

கருத்தரித்தலும் புகைப் பழக்கமும்

உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் கர்ப்பம் அடைவதற்கு, கருத்தரிப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம். நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தும் வரை கருத்தரிப்பது தாமதமாகும். தினமும் 5 சிகரெட் பிடிக்கும் நபராக இருந்தால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு மிகக் கடினம்.

அடிக்கடி ஆரோக்கியமான உடலுறவு வைத்துக் கொண்ட பிறகும் கருத்தரிக்க தவறினால் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் மலட்டுத்தன்மை ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். நீங்கள் புகைப்பிடிக்கும் நபரின் அருகில் நின்று அந்த காற்றை சுவாசித்தால் கூட கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாகும். குட் வைஃப் தொடரில் கருப்பையில் வளரும் குழந்தையின் உடலுறுப்புகள் போதிய வளர்ச்சி பெறாததால் இறந்து பிறக்க வாய்ப்பு அதிகம் என காண்பித்திருந்தனர். இதற்கு Anencephaly எனப் பெயர். எனவே குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க விரும்பினால் புகைப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்.

அதேபோல கருத்தரிக்க முயற்சிக்கும் குறைந்தது நான்கு மாதங்களுக்கு முன்பே புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட வேண்டும். அதோடு உடல் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்வதும் முக்கியம்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com