பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்பட காரணம் என்ன? இந்த அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க

பூஞ்சையால் ஏற்படக்கூடிய இந்த ஈஸ்ட் தொற்றினால் பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், வெள்ளை படுதல் அல்லது கடுமையான அரிப்பு ஏற்படும். இதன் அறிகுறிகள் என்ன என்றும் எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்றும் இங்கு பார்க்கலாம். 
image

பெரும்பாலான பெண்கள் தங்கள் இளம்பருவத்தில் அனுபவிக்கும் ஒரு பொதுவான வெளியில் சொல்ல தயங்கும் ஒரு பிரச்சனை பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் நோய்த்தொற்று ஆகும். இது பலருக்கும் தொந்தரவாக இருக்கும். இந்த வகை நோய் தொற்று பிறப்புறுப்பில் ஈஸ்ட் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படுகிறது. பொதுவாக கேண்டிடா அல்பிகான்கள் என்ற பாக்டீரியா ஈஸ்ட் இயற்கையாகவே பிறப்புறுப்பில் இருக்கும்போது, சில காரணிகள் சமநிலையின்மைக்கு வழிவகுக்குகிறது. இதன் விளைவாக அந்த பகுதியில் ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறது. அந்த வரிசையில் ஈஸ்ட் நோய்த்தொற்றின் அறிகுறிகளைப் பற்றி விழிப்புடன் இருப்பது முக்கியம். இந்த ஈஸ்ட் தொற்றின் அறிகுறி மற்றும் தடுப்பது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஈஸ்ட் நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகள் என்ன?

அரிப்பு மற்றும் எரிச்சல்:


ஈஸ்ட் நோய்த்தொற்றின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். இது குறிப்பாக சிறுநீர் கழிக்கும் போது அல்லது உடலுறவின் போது எரியும் உணர்வுடன் சேர்ந்து ஏற்படலாம்.

this-pain-is-so-exhaustive_329181-10421

வெள்ளை படுதல்:


ஈஸ்ட் நோய்த்தொற்றின் மற்றொரு முக்கியமான அறிகுறி பாலாடைக்கட்டி போன்ற தடிமனான, வெள்ளை படுதல். இந்த வெள்ளை படுத்தல் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம் வீசக்கூடும்.

மேலும் படிக்க: கர்ப்ப கால ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் கவலையா? இதோ 5 இயற்கை வைத்தியங்கள் உங்களுக்காக!

அதிக வலி:


ஈஸ்ட் தொற்று உள்ள பெண்கள் பிறப்புறுப்பு பகுதியில் வலி அல்லது அலர்ஜியை அனுபவிக்கலாம். இந்த அசௌகரியம் சிலருக்கு லேசானதாகவும் சிலருக்கு கடுமையானதாகவும் இருக்கலாம். அதே போல சிறுநீர் கழித்தல் அல்லது உடலுறவு போன்ற செயல்பாடுகளின் போது இந்த வலி மோசமடையக்கூடும்.

front-view-woman-dealing-with-std_23-2149485556

சிவத்தல் மற்றும் வீக்கம்:


ஈஸ்ட் தொற்று உள்ள பெண்களில் வுல்வா பகுதி மற்றும் யோனி திசுக்களில் சிவந்து போவது அல்லது வீக்கம் தோன்றலாம். இது அசௌகரியம் மற்றும் எரிச்சல் உணர்வுகளுக்கு பங்களிக்கக்கூடும்.

தோல் அரிப்பு:


சில நேரங்களில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டால் யோனியைச் சுற்றியுள்ள தோலில் தடிப்பு மற்றும் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் காற்றோட்டமான ஆடைகளை அணிய மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வேறு சில அறிகுறிகள்:

மேலே குறிப்பிட்டுள்ள முதன்மை அறிகுறிகளுடன் கூடுதலாக, ஈஸ்ட் நோய்த்தொற்று உள்ள பெண்கள் உடலுறவின் போது வலி, சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு மற்றும் யோனி பகுதியில் அசௌகரியத்தின் பொதுவான உணர்வு போன்ற பிற அறிகுறிகளையும் அனுபவிக்கலாம். உங்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உடனே ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது. இது போன்ற அறிகுறிகளை கண்டால் ஈஸ்ட் நோய்த்தொற்று இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். எனவே உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது போலவே உங்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டும்.

Image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP