குழந்தைகளிடம் வாசிப்புத் திறன் இல்லையா? அப்ப மறக்காமல் இதை செய்திடுங்க!

புத்தகங்களை நண்பராக்கிக் கொண்டால் வாழ்க்கையில் அத்துனைத் துயரங்களையும் எளிதாக கடந்து செல்ல முடியும்.

reading book

புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இருந்தால் போதும், சமூகத்தில் எந்த சூழலிலும் அசால்ட்டாக சமாளித்து விடுவோம். ஆனால் என்ன படிக்கும் என்பது சட்டென்று வந்துவிடாது. சிறு வயதில் இருந்தே அதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது. அறிவுத்திறனை வளர்க்க வேண்டும் என்றால் குழந்தைப் பருவத்தில் இருந்தே சமூக நீதி கதைகள், நினைவாற்றலை வளர்க்கும் புத்தகங்கள் போன்றவற்றைக் கட்டாயம் படிக்க கற்றுத் தர வேண்டும். இதோ எப்படி உங்களது குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகப்படுத்த வேண்டும்? இதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியது? என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

reading development

குழந்தைகளும் வாசிப்புத்திறனும்:

இன்றைய குழந்தைகள் மொபைல் பழக்கத்திலிருந்து அடிமையாகி விட்டால் உடனே புத்தகங்களை வாசிக்க வைப்பது என்பது பெரும் சவாலான விஷயம். இந்த சமயத்தில் பெற்றோர்கள், வண்ண வண்ண கலர்கள் மற்றும் பொம்மைகள் உள்ள புத்தகங்களை அதிகம் வாங்கிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக புராணக் கதைகள் மற்றும் நன்னெறி பழமொழி கதைகள் குறித்த புத்தகங்களை வாங்கிக் கொடுக்கவும். முதலில் இதில் உள்ள கதாபாத்திரங்களின் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும். இவர்களின் கற்பனைத் திறன் வளர்ச்சியடைய உதவியாக இருக்கும்.

இதற்கு அடுத்தாற்போல் அவர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் தெனாலிராமன் கதை புத்தகங்கள் மற்றும் அறம் சார்ந்த சிந்தனைகளை வளர்க்கும் புத்தகங்களை வாங்கி வீட்டில் அழகாக அடுக்கி வைக்கவும். குழந்தைகளிலே அவர்களின் வாசிப்புத்திறன் திறம்பட இருக்காது. எனவே பெற்றோர்கள் அவர்களுடன் உட்கார்ந்து கதைப் புத்தகங்களை வாசித்துக் காட்டவும். கதைகளாக வாசித்து சொல்லும் போது, ஆழமாக அவர்கள் மனதில் பதிந்திருக்கும். காலப்போக்கில் அவர்களும் புத்தகத்தின் மீது காதல் கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்.

வாய்விட்டு படிக்கச் சொல்லுதல்:

குழந்தைகள் எழுத்துப் பிழையின்றி வாசிக்க வேண்டும் என்றால் அவர்களை சிறு வயதில் இருந்தே வாய் விட்டு படிக்கச் சொல்லவும். சத்தமாக படிக்கும் போது, கூச்ச சுபாசம் போய்விடும். மேலும் நாவிற்கு நல்ல பயிற்சியாக அமையக்கூடும்.. மேலும் கதை புத்தகமோ? அல்லது குழந்தைகளின் பள்ளிப் புத்தகம்? என எதுவாக இருந்தாலும் படிக்கும் போது எழக்கூடிய சந்தேகங்களைக் கேட்க அறிவுறுத்தவும். அதற்கு உரிய பதிலை பெற்றோர்கள் வழங்கினால் குழந்தைகளுக்கு படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க:டீன் ஏஜ்ஜில் உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா? பெற்றோர்களே உஷாரா இருந்துக்கோங்க!

reading habit

படிப்பதற்கான நேரம்:

குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதற்கான படி, படி என்ற வார்த்தைகளை அடிக்கடி நீங்கள் கூறியிருப்பார்கள். பெற்றோர்கள் சொன்னவுடனே குழந்தைகள் கேட்பார்களா? என்பது கேள்விக் குறிதான். இந்த சூழலில் குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த அதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். மேலும் அவர்கள் செய்யும் திறனை ஊக்கப்படுத்த பரிசுகளைக் கொடுக்க முயற்சி செய்யவும். இவ்வாறு செய்யும் போது குழந்தைகளின் படிப்பாற்றல் அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்து செயல்படவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP