herzindagi
vasantha navratri quotes

Vasantha Navratri Wishes & Quotes in Tamil: துர்கையின் ஆசியுடன் நலமாகவும் வளமாகவும் வாழ வசந்த நவராத்திரி வாழ்த்துகள்

Vasantha Navratri 2024 Wishes, Quotes, Messages And Status: வசந்த நவராத்திரியில் துர்கா தேவியின் ஆசி கிடைத்திட விரதம் இருக்கும் அனைவருடனும் வசந்த நவராத்திரி வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2024-04-09, 10:18 IST

வசந்த நவராத்திரி என்பது வசந்த காலத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படும் இந்து பண்டிகையாகும். இது பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும். சைத்ர நவராத்திரி என்றும் வசந்த நவராத்திரி அழைக்கப்படுகிறது. இந்த திருவிழா ஒன்பது நாட்கள் நீடிக்கும். இந்து தெய்வமான துர்காவின் ஒன்பது வடிவங்களை வழிபட ஒன்பது நாட்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வசந்த நவராத்திரியின் போது பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து பூஜைகள் செய்து துர்கா தேவியை வணங்குகின்றனர். ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை வசந்த நவராத்திரி கடைபிடிக்கப்படுகிறது. நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் வசந்த நவராத்திரியைக் கொண்டாடினால் உங்களிடையே பகிர்வதற்கான சில வாழ்த்துகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

  • முப்பெரும் தேவிகளின் நவ ரூபங்களை வணங்கி வசந்த நவராத்திரியை நலமுடன் தொடங்குவோம்.
  • இந்த நவராத்திரியின் புனித நாட்களில் துர்கா தேவி தனது தெய்வீக ஆசீர்வாதங்களை உங்கள் மீது பொழியட்டும். வசந்த நவராத்திரி நல்வாழ்த்துகள்.
  • உங்கள் வாழ்விலும் இல்லத்திலும் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நல்ல ஆரோக்கியம் இருக்கட்டும். அனைவருக்கும் வசந்த நவராத்திரி வாழ்த்துகள்.
  • நவராத்திரியின் வண்ணங்களும் விளக்குகளும் எப்போதும் உங்கள் வீட்டை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நிரப்பட்டும். வசந்த நவராத்திரி வாழ்த்துகள்.
  • வசந்த நவராத்திரி திருநாளில் துர்கை உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் அருளை பொழிய நவராத்திரி வாழ்த்துகள்.
  • பெயர், புகழ், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி, மனிதாபிமானம், அறிவு, பக்தி மற்றும் சக்தி ஆகிய 9 ஆசீர்வாதங்களுக்கு துர்கா தேவி உங்களை மேம்படுத்தட்டும் நவராத்திரி வாழ்த்துகள்.
  • தீமைகளிடம் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காத்து, வாழ்க்கையை ஒளி மயமாக்கி துர்கை காத்திட வசந்த நவராத்திரி வாழ்த்துகள்.
  • துர்கையின் ஆசியுடன் நீங்கள் நலமாகவும் வளமாகவும் வாழ வாழ்த்துகள்
  • தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் கொண்டாடுங்கள் மற்றும் தேவியின் அருளையும் ஆற்றலையும் பெறுவீர்கள்.
  • அறிவின் ஆற்றலும், செல்வத்தின் செழிப்பும், வீரத்தின் வெளிப்பாடும், ஒருங்கே அமைந்த நன்னாளில் மூப்பெருந்தேவியை வணங்குவோம். இனிய வசந்த நவராத்திரி வாழ்த்துகள்.
  • ஒன்பது தெய்வீக நாட்கள் உங்கள் வாழ்க்கையை என்றென்றும் ஒளிரச் செய்யட்டும். அனைவரும் வசந்த நவராத்திரி வாழ்த்துகள.
  • துர்கா தேவி உங்களுக்கு அருள் புரிவாராக... இன்றும் எப்பொழுதும் அவளது தெய்வீக ஆசீர்வாதங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிட்டும். வசந்த நவராத்திரி வாழ்த்துகள்.
  • இந்த வசந்த நவராத்திரியில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிறைய மகிழ்ச்சி, செழிப்பு, வெற்றி கிடைக்கட்டும். துர்கா தேவி உங்கள் வாழ்க்கையை தெய்வீக ஆசீர்வாதங்களால் நிரப்பட்டும்.

இதுபோன்ற ஆன்மிகம் சார்ந்த கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com