ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி காதலர் வாரத்தின் நான்காம் நாளில் டெடி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு டெடி தினம் சனிக்கிழமை வருகிறது.
மென்மையான டெடி பொம்மைகள் காதலர் வாரத்தில் காதலியிடம் வழங்குவதற்கு சரியான பரிசாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை பல்வேறு காரணங்களுக்காக டெடி பொம்மைகள் அனைவராலும் விரும்பப்படுகின்றன. நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி மறைந்த அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் நவம்பர் 14ஆம் தேதி 1902 ஆண்டு மிசிசிப்பிக்கு வேட்டையாடச் சென்றார். அவருடன் சென்ற நபர்களும் காட்டில் கரடிகளை வேட்டையாடலாம் என முடிவெடுத்துள்ளனர்.
ஆனால் அங்கு சக நபர்களைப் போல அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டால் ஒரு கரடியைக் கூட வேட்டையாட முடியவில்லை. அதன் பிறகு உடனிருந்த ஒருவர் கரடி ஒன்றை பிடித்து அதை ரூஸ்வெல்ட் சுடுவதற்காக மரத்தில் கட்டியுள்ளார். இதை நியாயமான விளையாட்டாக உணராத ரூஸ்வெல்ட் கரடியை சுட மறுத்துவிட்டார். கரடியை அவர் சுட மறுத்த விஷயம் காட்டுத்தீ போல பரவியது.
இந்த சம்பவத்தை மையமாக வைத்து பிரபல ஆங்கில பத்திரிகையான வாஷிங்டன் போஸ்டில் நையாண்டி கார்ட்டூன் வெளியானது. இந்த கேலிச்சித்திரத்தை பார்த்த சாக்லேட் கடை உரிமையாளரான மோரிஸ் மிக்டோம் கரடி வடிவில் பொம்மை ஒன்றை உருவாக்கி அதற்கு டெடி பியர் என்று பெயரிட்டார்.
மேலும் படிங்க ரொமான்டிக் பரிசோட ப்ரோபோஸ் பண்ணுங்க! லவ் சக்சஸ்
முதல் முறையாக கரடி பொம்மை உருவாக்கப்பட்டதையடுத்து அவை பல ஆண்டுகளாகப் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. டெடி பியர்கள் இரக்கம் மற்றும் பாசத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. நாளடைவில் பொதுமக்கள் டெடி பியர்களை தங்கள் குழந்தைகள், நண்பர்கள் அல்லது காதல் உறவுக்கு அரவணைப்பையும் அன்பையும் வெளிப்படுத்துவதற்காக அவற்றை வாங்கத் தொடங்கினர். இன்றும் கூட டெடி பியர்கள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
டெடி பியர்கள் குழந்தைகளுக்கான பொம்மையாகத் தோன்றினாலும் இந்த நாளில் டெடியைப் பரிசளிப்பது அல்லது பெறுவது நமது குழந்தை பருவ நினைவுகளை உணரச் செய்திடும். இது ஒருவரின் தினத்தை ஆயிரம் மடங்கு சிறப்பாக மாற்ற உங்களிடமிருந்து கிடைக்ககூடிய சிறிய அடையாளமாக இருக்கும்.
இந்த விசேஷ நாளில் உங்கள் காதலிக்கு கரடி பொம்மையை பரிசளிக்கவும். இந்த மென்மையான கரடி பொம்மையை போல் உங்களையும் கட்டியணைத்து மகிழ்வதற்கான சிறந்த வழி இந்த டெடி டே ஆகும். இந்த நாளில் இருவரும் வெளியே சென்று சாப்பிடவும் திட்டமிடுங்கள். இது உங்கள் அன்புக்குரியவருடன் புதிய நினைவுகளை உருவாக்கலாம்.
மேலும் படிங்க மனம் கவர்ந்த காதலிக்கு இதயப்பூர்வமான ப்ரோபோஸல்
இது போன்ற காதலர் வார சிறப்பு கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com