உங்கள் காதலியிடம் ப்ரோபோஸ் செய்யும் போது அவர் மீதான அன்பையும் அர்ப்பணிப்பையும் வெளிகாட்டுவது மிகவும் முக்கியமான விஷயமாகும். ப்ரோபோஸ் செய்யும் முன்பாக எப்போதும் நினைவில் இருக்கும் அர்த்தமுள்ள பரிசை காதலியிடம் கொடுங்கள். அந்தத் தருணம் உங்கள் காதல் பயணத்தில் நீங்கா இடம்பிடிக்கும். எதை பரிசளித்து ப்ரோபோஸ் செய்யலாம் என சந்தேகமாக இருந்தால் அதற்கான ஆலோசனைகள் இங்கே...
வைர மோதிரம் அல்லது தங்க மோதிரத்தை கொடுப்பது காதலியை ப்ரோபோஸ் செய்வதற்கு ஒரு பிரபலமான பரிசாகும். காதலியின் குணத்தையும், தன்மையையும் அறிந்து அதை பிரதிபலிக்கும் வகையிலான மோதிரத்தை பரிசாக வழங்கவும். ஒரு மோதிரம் உங்கள் அன்பின் சின்னமாக விளங்குகிறது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அழகாக வடிவமைக்கப்பட்ட மோதிரத்தை பரிசளித்து ப்ரோபோஸ் செய்யலாம்.
‘ஐ லவ் யூ’ என எழுதப்பட்ட இதய வடிவ கேக்கின் வசீகரத்தை மிஞ்சம் அளவிற்கு இங்கு எந்த பரிசுக்கும் இல்லை. உங்களின் நீண்ட நாள் காதலியிடம் ப்ரோபோஸ் தினத்தில் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்க விரும்பினால் அதற்கு சுவை மிகுந்த இதய வடிவிலான கேக் உறுதியான பதிலை பெற்றுத் தரும் என உறுதியளிக்கிறோம்.
பிரேஸ்லெட் காதலையும் ஒற்றுமையையும் குறிக்கிறது. இது ப்ரோபோஸ் தினத்தில் காதலனிடம் வழங்க உரிய பரிசாகும். ப்ரோபோஸல், காதலின் அடையாளமாகப் பிரேஸ்லெட் கொடுப்பது ஸ்டைலான பரிசாக அமைகிறது.
மேலும் படிங்க மனம் கவர்ந்த காதலிக்கு இதயப்பூர்வமான ப்ரோபோஸல்
நீயும் நானும் என அச்சிடப்பட்ட குஷனை உங்கள் அன்பை வெளிப்படுத்தும் பரிசாக கொடுத்து ப்ரோபோஸ் செய்யுங்கள். இது ஒருவரின் அன்பின் நிலையான நினைவூட்டலாக செயல்படுகிறது. இந்த இதயப்பூர்வமான பரிசின் மூலம் உங்கள் காதலியை ஆச்சரியப்படுத்துங்கள்.
கைக்கு அடக்கமாக நீங்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மினியேச்சர் சிலையாக வடிவமைத்துப் பரிசளியுங்கள்.
இதய வடிவ டாலரில் உங்கள் பெயரின் முதல் எழுத்து பொறித்த செயின் அல்லது நெக்லெஸை காதலியிடம் பரிசாக அளித்து ப்ரோபோஸ் செய்யுங்கள். அவர்களிடம் உடனடி ரியாக்ஷன் இல்லாமல் போகலாம், ஆனால் சிறிது நேரம் கழித்து அவர்களின் கழுத்தில் அந்த செயின் நிச்சயம் இருக்கும். இது உங்கள் காதலை உறுதிப்படுத்துவதாக அர்த்தம்.
மேலும் படிங்க காதலியிடம் எப்படி ப்ரோபோஸ் பண்ணலாம்?
இந்த பரிசுகளைக் கொடுக்கும் முன்பாகக் காதலிக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது எனத் தெரிந்து கொள்ளுங்கள். எந்த பரிசை வாங்கி கொடுத்தாலும் அதில் வெளிப்படுத்தும் அன்பே மிக முக்கியமான விஷயமாகும். நீங்கள் அளிக்கும் பரிசு உங்கள் உறவை பிரதிபலிக்க வேண்டும் மற்றும் உங்கள் காதலின் ஆழம் எவ்வளவு என்பதை காதலிக்கு காண்பிக்க வேண்டும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com