காதலர் தினம் என்பது நாம் பாசமும், நேசமும் கொண்டிருக்கும் உறவிடம் ஆழமான காதலை உணர்த்தும் நாளாகும். காதலர் தினத்தை காதல் ஜோடிகள் வெவ்வேறு விதங்களில் கொண்டாடுகின்றனர். காதலர் தினத்தன்று இதயப்பூர்வமான அன்பை காதல் உறவிடம் வெளிப்படுத்தினாலே போதுமானது. பரிசுகளை கொடுத்து காதல் உறவை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் இருவரிக் கவிதை அவர்களின் மனங்களை வெல்லும். அன்பை போற்றும் காதலர் தினத்தன்று காதல் உறவுக்கு மறக்காமல் அனுப்ப வேண்டிய காதலர் தின வாழ்த்து, கவிதை, குறுஞ்செய்தி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
காதலர் தின வாழ்த்து, கவிதை 2025
- என் அன்பே... ஒவ்வொரு நாளும் உன்னை பற்றி நினைப்பதில் தொடங்கி உன்னை பற்றி நினைப்பதிலேயே முடிகிறது...
- காதல் காற்றை போன்றது... நம்மால் அதைப் பார்க்க முடியாது... ஆனால் அதை உணர முடியும்
- என் வாழ்வில் எது நடந்தாலும் தாங்கிக் கொள்வேன்... உறுதுணையாய் நீ இருக்கும் போது...
- ஓரெழுத்து கவிதை நீ... ஈரெழுத்து கவிதை நாம்... மூன்றெழுத்து கவிதை காதல்...
- நான்கெழுத்து கவிதை முத்தம்... ஐந்தெழுத்து கவிதை திருமணம்... எத்தனை
- எழுத்தில் கவிதை எழுதினாலும் உன் நினைவுகள் மட்டும் என் அன்பே...
- காதலுக்கும் கவிதைக்கும் வித்தியாசம் என்னவெனக் கேட்டாய்... உன்னோடு பேசினால் அது காதல்...! உன்னை பற்றி பேசினால் அது கவிதை...
- முதுமையானாலும் வாழ்க்கை புதுமையாகவே இருக்கும்... மனதிற்குள் உண்மையான காதல் இருந்தால்...
- உறவாக யாரும் வேண்டாம்... உயிராக நீ மட்டும் போதும்... இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்...
- காரணமின்றி காதல் வருகிறதடி உன் மீது... ஏனோ உன்னைப் பிடிக்கிறது...
- உனக்கும் என்னை பிடித்தால் காதல் செய் என்னவளே...
- காதலும் கூட சில நேரங்களில் பொறாமை கொள்கிறதடி சகியே, உன் மீது நான் காட்டும் காதலைக் கண்டு...
- ரோஜா இதழ்களும் தலை குனிந்ததோ... உன் இதழிடம் தோற்ற சோகத்தில்... காதலர் தின நல்வாழ்த்துகள்...
- நீ தூங்குவதற்கு சிறந்த இடம் என் இதயம் என்றால் உனக்காக என் இதயத்துடிப்பையும் நிறுத்திவைப்பேன்... நீ விழிக்கும் வரை...
- சொல்லத் துடிக்கும் உதடுகளுக்கும் சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட உணர்வே காதல்...
- உன்னில் நானும் என்னுள் நீயும் வாழும் நமக்கு தினமும் காதலர் தினமே...
- திருமணம் முடியும் வரை செய்வதல்ல காதல்... கண்மூடும் வரை செய்வதே காதல்...
- என்னவனுக்குள் தொலைந்த நொடியிலிருந்தே தினமும் எனக்கு காதலர் தினம்...
மேலும் படிங்கValentine's day : “அன்பெனும் காதல் ஆயுதம்” ஆசை உறவுடன் அளவில்லா கொண்டாட்டம்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation