மனிதர்கள் யாவரும் ஒருமுறையாவது தங்களுடைய வாழ்நாளில் காதல் வயப்பட்டு இருப்பார்கள். காதல் வயப்படாத மனிதர்கள் இவ்வுலகில் இருக்க வாய்ப்பில்லை. கண்களால் காதல் செய்து கடிதம் கொடுத்த காலம் மாறி யார் என்று தெரியாமலேயே தொலைதூர காதலுக்கு வழிவகுத்துள்ளது டிஜிட்டல் காலம். ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே என பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கிய காதலவர் வாரம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தின கொண்டாட்டத்துடன் நிறைவுபெறுகிறது. காதல் பயணத்தில் அன்பு, பாசம், அர்ப்பணிப்பை வெளிப்படுத்த காதலர் தினத்தை விட வேறொரு சிறப்பான நாள் கிடைக்காது. உண்மை காதல் எப்போதுமே ஜெயிக்கும். காதலர் தினத்தை கொண்டாட பல்வேறு வழிகளில் கொண்டாட காதலர்கள் தயாராகும் நிலையில் அது எவ்வாறு தோன்றியது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
காதலர் தினம் தோற்றம் குறித்த தரவுகள் தெளிவின்மையாக இருக்கின்றன. 14ஆம் நூற்றாண்டில் காதலர் தினம் தோன்றி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சிலர் ரோமானிய திருவிழாவுடன் காதலர் தினத்தை தொடர்புபடுத்துகின்றனர். பிப்ரவரி மாதம் நடந்த அத்திருவிழாவில் லாட்டரி முறையில் ஆண்கள் - பெண்கள் இணைந்ததாக சொல்லப்படுகிறது. போப் ஜெலாசியஸ் ரோமானிய திருவிழாவை காதலர் தினமாக மாற்றியுள்ளார்.
இரண்டாம் ரோமானிய பேரரசர் கிளாடியஸின் ஆட்சி காலத்தில் போப் ஒருவர் போருக்கு ஆண்கள் செல்வதை தடுக்க ரகசிய திருமணங்கள் செய்து வைத்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நாளான பிப்ரவரி 14ம் தேதியை காதலர் தினமாக கொண்டாட தொடங்கினர்.
காதல் உறவில் இருவரும் போதுமான நேரமான ஒதுக்கி அன்பை வெளிப்படுத்துகின்றன்ரா என்பதே காதலர் தினத்தின் முக்கியத்துவம். எந்தவொரு கடினமான சூழலாக இருந்தாலும் பிரிந்துவிடாமல் ஒன்றாக எதிர்கொள்வோம் எனவும் உறுதியேற்கலாம்.
மேலும் படிங்க Valentines Day 2024 : காதலர் தினம்! நெஞ்சம் நிறையுதே காண்பதெல்லாம் காதலடி...
ரோஜா கொடுப்பது, காதல் கவிதை எழுதுவது, கடிதம் எழுதுவது, சின்ன சின்ன பரிசுகளை கொடுப்பது, இருவருக்கும் பிடித்தமான இடங்களுக்கு செல்வது, உணவகங்களுக்கு செல்வது இருந்த காதலர் தின கொண்டாட்டங்கள் தற்போது மாறிவிட்டன. இவையெல்லாம் செய்தால் தான் காதல் என அர்த்தமில்லை. இருவரும் உண்மையாக அன்பை வெளிப்படுத்துவதும் காதல் கொண்டாட்டமே.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com