தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் புத்தாண்டு சித்திரையுடன் தொடங்குவது போல தெலுங்கு புத்தாண்டு உகாதி நன்நாளில் தொடங்குகிறது. இந்நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் நம்புகின்றனர். இந்த நாளில் தெலுங்கு சகோதரர்களுக்கு அனுப்ப வேண்டிய யுகாதி, தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்து, கவிதை, குறுஞ்செய்தி இங்கு பகிரப்பட்டுள்ளது.
உகாதி வாழ்த்து 2025
தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்து
- தமிழ் மக்களின் இதயத்துடன் இரண்டறக் கலந்து உள்ளத்தில் ஒன்றிணைந்து நட்புணர்வுடன் வாழும் தெலுங்கு, கன்னட மொழி சகோதரர்களுக்கு இனிய உகாதி திருநாள் வாழ்த்துகள்.
- வசந்த காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் இந்த உகாதி திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரும் நாளாக அமையட்டும்.
- மனிதம் தோன்றியதை கொண்டாடும் மகத்துவமான பண்டிகை. தேன் இனிய தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் தெலுங்கு சகோதரர்களுக்கு உகாதி திருநாள் வாழ்த்துகள்.
- புத்தாண்டு நன்நாளாம் யுகாதி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட சகோதரர்களுக்கு இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள்.
- தெலுங்கு வருடப்பிறப்பாம் யுகாதி திருநாளை உவகையோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள்.
- புதிய யுகத்தின் ஆரம்பம் என்ற பொருள் கொண்ட யுகாதி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
- பிரம்மன் இவ்வுலகை படைத்த நாளாக கருதப்படும் உகாதி நாளில் அனைவரது இன்னல்களும் நீங்கி இன்பம் சேர தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துகள்
- தெலுங்கு பேசும் நண்பர்கள் அனைவருக்கும் உகாதி நல்வாழ்த்துகள்.
- இல்லத்தில் இன்பமழை பொழிய இனிய தெலுங்கு வருடப்பிறப்பு நல்வாழ்த்துகள்.
- உகாதி திருநாளை உற்காசத்துடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இனிய உகாதி வாழ்த்துகள்.
- தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகள்.
- கலை, கலாசாரத்தில் தீராத பங்களிப்பை தரும் தெலுங்கு சகோதரர்கள் யுகம் யுகமாய் மேலோங்கி வாழ யுகாதி வாழ்த்துகள்.
- உகாதி திருநாளில் இன்னல்கள் நீங்கி இன்பம் சேர அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துகள்.
- இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் செழிப்பையும் மகழ்ச்சியையும் தர மனமார்ந்த வாழ்த்துகள்.
- யுகம் யுகமாய் மேலோங்கி வாழ கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி வாழ்த்துகள்
- அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் என்றென்றும் நிலைத்திருக்க யுகாதி நல்வாழ்த்துகள்
- இனிய தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகள்.
மேலும் படிங்கஉகாதி திருநாளில் எல்லா வளமும் நலமும் பெற மனமார்ந்த வாழ்த்துகள்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation