தமிழகத்தில் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் கொண்டாட்டம் களைகட்டும். உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் வருவார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் பொங்கலை முன்னிட்டு ஏராளமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடுவார்கள். பொங்கல் விழாவை நீங்கள் குழுவாக நடத்த திட்டமிட்டு இருந்தால் இந்த பதிவில் உள்ள விளையாட்டுகளை தவறவிடாதீர்கள்.
எட்ட முடியாத உயரத்தில் மஞ்சள் தண்ணீர் நிரப்பிய பானையை கட்டிவிட்டு கண்களை மூடிக்கொண்டு அடித்து விளையாடப்படும் பானை உடைத்தல் பொங்கல் விழாவில் தவறவிடக்கூடாத விளையாட்டுகளில் ஒன்றாகும். பானையை உடைக்கும் நபருக்கு பரிசு வழங்குவது அல்லது மாலை அணிவிப்பது வழக்கம்.
பானை உடைத்தல் போல சிறுவர்கள் விளையாடுவதற்கு பொதுவான உயரத்தில் கயிற்றில் பலூன் கட்டி தொங்கவிடுவார்கள். வாயில் ஊசி வைத்து மேலே பார்த்து பலூனை உடைக்கும் சிறுவருக்கு பரிசு வழங்கப்படும்.
குறிப்பிட்ட தூரத்திற்கு ஸ்பூன் மீது லெமன் வைத்து வேகமாக நடந்து சென்று இலக்கை அடைய வேண்டும். இது சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு.
சமமான எண்ணிக்கையில் இரு அணிகள் பிரிக்கப்பட்டு கோட்டிற்கு இருபுறம் நிற்க வேண்டும். எந்த அணி கோட்டை தாண்டி செல்கிறதோ அல்லது கீழே விழுந்து சரிகிறதோ அந்த அணி தோல்வியை தழுவும். இந்த விளையாட்டு ஒருவரின் எடையைப் பொறுத்தது அல்ல. உடல் மற்றும் மன வலிமையை பொறுத்தது.
இது அனைவருக்குமே தெரிந்த விளையாட்டு. கடைசி வரை யார் போட்டியில் நீடிக்கிறார்களோ அவரே வெற்றியாளர். கிராமத்து போட்டிகள் எப்போதும் கடினமாக இருக்காது. அனைவரையும் விளையாட்டில் பங்கேற்க வைப்பதே பொங்கல் விழாவின் நோக்கமாகும்.
சைக்கிளை குறிப்பிட்ட தூரத்திற்கு மிகவும் மெதுவாக ஓட்டிச் செல்ல வேண்டும். எந்த போட்டியாளர் கடைசியாக வருகிறாரோ அவரே வெற்றியாளர். எக்காரணம் கொண்டு கால் தரையில் படக்கூடாது.
இதே போல சறுக்கு மரம் ஏறுதல், கபடி, ஆண்களின் வீரத்தை அறிய இளவட்டக்கல் தூக்குதல் ஆகிய போட்டிகள் பொங்கல் விழாவில் நடத்தப்படும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com