Nalangu Function: தமிழ் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு, மணமகனுக்கு செய்யப்படும் நலங்கு சடங்குகளின் முக்கியத்துவம்

தமிழ் திருமணங்களில் நலங்கு விழா முக்கிய சடங்காக நடத்தப்படுகிறது. மணமகனும், மணமகளும் தங்கள் குடும்பத்தினரால் ஆசீர்வதிக்கப்பட்டு மேலும் அவர்களை அழகுபடுத்த நடத்தப்படும் ஒரு சடங்காகும். இந்த விழா உறவுகள் ஒன்றிணைத்து, திருமணத்தை முன்னின்று ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக நடத்த செய்யப்படும் அழகிய நிகழ்வாகும்.
image

தழிழ் திருமணங்களில் நடத்தப்படும் முக்கிய சடங்குகளில் நலங்கு வைக்கும் முறையாகும். திருமணத்திற்கு 5 நாட்கள் முன்னதாகவே இந்த நிகழ்வு தொடங்கப்படும். திருமண வீட்டை மேலும் அழகுபடுத்தும் விதமாக அமைவது இந்த நலங்கு சடங்காகும். சந்தன நலங்கு, எண்ணெய் நலங்கு என ஒவ்வொரு நாளைக்கும் வேறு விதமான நலங்கு வைப்பார்கள். இந்த 5 நாட்களில் மேனியை மென்மையாக்கும் விதமாகவும் இந்த நலங்கு சடங்கு அமைகிறது. திருமணத்திற்கு 5 நாட்கள் முன்னதாகவே பச்சை பயிறு மாவு, கடலை மாவு, சந்தனம் மற்றும் நலங்கு மாவுகளை கொண்டு முகத்தை பளபளப்பாக வைத்திருக்க இந்த நிகழ்வு நடத்த படுகிறது. நலங்கு என்பது திருமணத்திற்கு முந்தைய ஒரு மகிழ்ச்சியான சடங்குகளில் ஒன்றாக இருந்தாலும், இது கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அவை என்ன என்பதை பார்க்கலாம்.

நலங்கு வைக்கும் முறை

முதல் நாள் நடத்தப்படும் நலங்கில், காலையில் முகூர்த்த நேரத்தில் பந்தக்கால் நட்ட பிற, நல்ல நேரத்தை பார்த்து நலங்கு வைக்க தொடங்குவார்கள். தமிழகத்தில் காலை, மாலை இரண்டு வேலையும் நலங்கு வைக்கும் முறை உண்டு. சம்பந்தி நலங்கு, தாய்மாமன் நலங்கு, அத்தை நலங்கு, அக்கா நலங்கு மற்றும் தங்கை நலங்கு என பல நெருக்கி உறவுகள் பராம்பரிய முறைப்படி நலங்கு வைப்பார்கள். குறிப்பாக சந்தன நலங்கு மாலை நேரத்தில் வைக்கப்படுகிறது, காலையில் எண்ணெய், நலங்கு மாவு முகத்தில் பூசி வைக்கப்படுகிறது, இதில் பச்சை பயிறு, கடலை மாவும் சேர்ப்பார்கள். காலை நலங்கு பெருத்த வரை மணமகன், மணமகள் நலங்கு வைத்த பிறகு குளிப்பார்கள், இது அவர்களை மேலும் அழகாக காட்டும், முகத்தில் கல்யாண கலையை வரவைக்கும்.

nalangu function 2

நலங்கு வைக்க தேவையான பொருள்கள்

இரண்டு குத்து விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி நலங்கு வைக்கும் முறையை தொடங்குவார்கள். வாழைப்பழம், பூக்கள், வெற்றிலை பாக்கு வைப்பார்கள். நலங்கு வைக்கும் உறவுகளுக்கு மற்றும் நெருங்கி நண்பர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுப்பது நமது முறைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. பன்னீர் தெளிப்பான், திருஷ்டி கழிக்க மஞ்சள் சுண்ணாம்பு கலந்த தண்ணீர், மஞ்சள், குங்குமம் மற்றும் மஞ்சள் அரிசி ஆகியவை மணமகன், மணப்பெண்ணை ஆசீர்வாதம் செய்ய வைப்பார்கள்.

மேலும் படிக்க: புதுமண தம்பதிகளுக்கு நடத்தும் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கின் முக்கிய அம்சங்கள்

உறவினர் வைக்கும் நலங்கில் செய்யப்படுபவை

உறவினர்கள் வைக்கும் நலங்கு தட்டு வரிசை வைத்து செய்வார்கள். மணமகன் அல்லது மணமகளுக்குப் புத்தாடை எடுத்து கொடுத்து அவர்களை அணிந்து வர செய்து நலங்கு வைப்பார்கள். உறவினர்களுக்கு ஏற்ற வகையில் வரிசை தட்டு வைத்து, பலகார வகைகள் வைத்து தங்கள் முறையை அழகாகவும், ஆனந்தமாகவும் செய்வார்கள்.

nalangu function 1

உற்றார், சுற்றத்தார், பெற்றோர் என அனைவரின் ஆசீர்வாதத்தைப் பெற்று மணமகன், மணமகள் இருவரும் நிறைய கனவுகளுடன் திருமணத்தை நோக்கி நிகழும் இந்த சடங்குகள் மனதிற்கு ஒரு விதமான மகிழ்ச்சியைத் தரக்கூடிய அற்புதமாக நிகழ்வாக இருக்கிறது.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP