வெற்றிலை என்றாலே, வயிறு நிரம்ப உணவு சாப்பிட பிறகு செரிமானம் சீராக சாப்பிடக்கூடிய ஒரு இலை என்பது அனைவரும் அறிந்ததே. வீட்டில் நடைபெறக்கூடிய விசேச நிகழ்ச்சிகளில் வெற்றலை இல்லாமல் இருக்காது. அந்தளவிற்கு மக்களின் வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகவிட்டது. பாட்டி வைத்திய முறைப் பற்றி தெரிந்தவர்கள் நிச்சயம் வெற்றிலையை ஒருமுறையாவது ஏதாவது உடல் நல பாதிப்பைக் குணப்படுத்த பயன்படுத்தியிருப்பார்கள். இவ்வாறு உடலுக்கு ஆற்றலை வெற்றிலை அளிப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே சமயம் பெண்களின் கூந்தல் வேகமாக வளர்ச்சிப் பெறவும் பொடுகுத் தொல்லை, பேன் தொல்லை போன்ற எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளவும் வெற்றிலை பேருதவியாக உள்ளது. இந்த பிரச்சனைகளைச் சரி செய்தாலே தலைமுடி நீளமாக வளர்ச்சிப் பெறவும். எப்படியெல்லாம் வெற்றிலையைப் பயன்படுத்த முடியும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: மாதுளை மற்றும் பீட்ருட் கலந்த ஜூஸ் போதும்; அதிக செலவில்லாமல் முகத்தைப் பொலிவாக்க முடியும்!
நீளமான கூந்தலை விரும்பாத பெண்கள் யாராவது இருக்கமுடியுமா என்ன? ஆனாலும் வேலைப்பளு, தலைமுடியில் ஏதாவது பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் இளம் வயதிலேயே முடி கொட்டுதல் பிரச்சனையை சந்திக்கின்றனர். இவற்றையெல்லாம் சரி செய்ய வெற்றிலை சிறந்த தேர்வாக அமையும். ஆம் இதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ, இரும்பு, கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலைக்கு ஊட்டமளித்து நுனி வரை தலைமுடியைப் பாதுகாக்கிறது.
மேலும் படிக்க: அதிக செலவு இல்லை; வீட்டிலேயே சருமத்தைச் சுத்தம் செய்யும் ஸ்கரப் செய்ய முடியும்!
வெற்றிலையில் உள்ள ஆன்டி பாக்டீரியல் போன்ற ஊட்டச்சத்துக்கள் பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படக்கூடிய தொற்றுக்களைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உச்சந்தலையில் உள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு தலைமுடி வேர் வரை சென்று ஊட்டமளிககிறது. குறிப்பாக வெற்றிலையில் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளதால், முடியை பலவீனப்படுத்தி அதன் வளர்ச்சியைத் தடுக்கும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைக் குறைக்கிறது.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com