நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு பழையன கழிதலும், புதியன புகுதலும் என்கிற அடிப்படையில் பொங்கல் பண்டிகைக்கு முந்தய நாள் அன்று போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். பழங்காலத்தில் இயற்கையாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்திய பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்தனர்.
ஆனால் இப்போது அப்படி இல்லை. போகி பண்டிகை கொண்டாடுவதற்காக டயர், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய ஒயர்கள் போன்றவற்றை எரிக்கின்றனர். இதனால் அடர் புகை வெளியேறி காற்றை கடுமையாக மாசுபடுத்துகிறது. இந்த நச்சு புகையானது வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவை குறைத்துவிடுகிறது. இதனால் சுவாசிக்கும் காற்றில் நச்சு பொருட்களின் அளவு அதிகரிக்கிறது. இதை சுவாசிப்பதால் இருமல், நுரையீரல் பிரச்சனை, கண் எரிச்சல் உட்பட பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதற்கு பதிலாக மாசு ஏற்படுத்தாத வகையில், புகையில்லா போகி திருநாள் கொண்டாடுவதற்கான சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
பழைய புத்தகங்கள்
பழைய பேப்பர் அல்லது புத்தகங்களை எரிப்பதற்கு பதிலாக நன்றாக இருக்கும் புத்தகங்களை ஏழை குழந்தைகளுக்கு அல்லது அருகில் இருக்கும் நூலகங்களில் கொடுக்கலாம். பழைய செய்தித்தாள்கள் மற்றும் கிழிந்த புத்தகங்களை பழைய பேப்பர்களை வாங்கும் கடைகளில் கொடுத்தால் அவர்கள் அதனை மறுசுழற்சி செய்து கொள்வார்கள். பழையன கழிதல் என்பது பழைய பொருட்களை அகற்ற வேண்டும் என்பது மட்டும் தானே தவிர அவற்றை எரிக்க வேண்டுமென்று அர்த்தம் அல்ல.
பழைய ஆடைகள்
பழைய ஆடைகளை ஏழைகளுக்கு கொடுத்து உதவலாம். அல்லது அவற்றை பயன்படுத்தி பொம்மைகளுக்கான ஆடைகள் அல்லது கைவினை பொருட்கள் செய்யலாம். வேலைபாடுகள் நிறைந்த ஆடைகள் கிழிந்து விட்டால் அல்லது பழையதாகிவிட்டால் வீட்டை அலங்கரிக்க அவற்றை பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்- Pongal Decoration Ideas : விருந்தினர்களை அசத்த பொங்கலுக்கு வீட்டை இப்படி அலங்காரம் செய்யுங்கள்
பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்கள்
பழைய பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்களை எரிப்பதற்கு பதிலாக அவற்றை பயன்படுத்தி அழகான கைவினைப் பொருட்களை செய்யலாம். உதாரணமாக கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி பூ ஜாடி, இரவு விளக்கு போன்றவற்றை செய்யலாம். பல வண்ண பேப்பர்கள் அல்லது துணிகளால் அவற்றை அழகாக அலங்கரிக்கலாம். இதனை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்தால் அவர்களின் படைப்பாற்றல் திறனும் அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்- கர்ப்பிணிகள் கரும்பு சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
image source:freepik, google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com