வாழ்க்கையில் நீங்கள் வெற்றியாளராக விளங்க விரும்பினால் அதற்கு நேர மேலாண்மையை பற்றி நன்கு புரிந்திருக்க வேண்டும். நேரம் என்பது பொன் போன்றது. ஒரு முறை கடந்துவிட்டால் மீண்டும் கிடைக்காது, திரும்பிச் செல்லவும் முடியாது. எவன் ஒருவன் நேரத்தைச் சரியான காரியங்களுக்கு செலவு செய்கிறானோ அவனே வாழ்க்கையில் வெற்றியாளராக முடியும் என்று பல பேச்சாளர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். நேர மேலாண்மை திறன் உங்களிடம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றியாளராக உருவெடுக்கலாம்.
வெற்றியை ருசிக்கும் மனிதர்களிடம் பொதுவான பழக்கம் ஒன்று இருக்கும். அது என்னவென்றால் எந்தவொரு விஷயத்தையும் முன்கூட்டியே தொடங்கி முடிப்பது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நேரத்தைக் வீணடிக்காமல் காலையிலேயே கவனமாக செயல்பட்டு அந்த வேலையை முடிக்க விரும்புவார்கள்.
எந்த விஷயம் மிகவும் முக்கியமானதோ அதற்கு முன்னுரிமை அளித்து செய்து முடிக்க வேண்டும். முக்கியமான விஷயத்தை முதலில் முடித்துவிட்டால் இதர வேலைகளை நேரம் எடுத்து செய்து முடிக்கலாம்.
வெற்றிகரமான மனிதர்கள் தங்களுக்கு கடும் சவால் அளிக்ககூடிய அல்லது சற்று விருப்பமில்லாத வேலையை முதலாவதாக முடித்துவிடுவார்கள். காலையில் கடினமான வேலையை முடித்த பிறகு நாள் முழுக்க மகழ்ச்சியாக இருப்பார்கள். இதற்கு EAT THE FROG எனப் பெயர்.
25 நிமிடம் மிகக் கவனமாக வேலை செய்தால் அடுத்த சில நிமிடங்களுக்கு ஓய்வு எடுப்பார்கள். இதனால் விரக்தி அடையாமல் அடுத்த வேலைக்கு நகர முடியும்.
எந்த விஷயத்தை அடைய வேண்டும் என தெளிவாகத் தெரிந்துகொண்டு அதில் கவனம் செலுத்தி வெற்றிகரமாக முடித்து காட்டுவார்கள். அதே போல நீங்களும் எதை அடைய வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
சில விஷயங்களில் உடன்பாடு இல்லாத போது அதற்கு மறுப்பு தெரிவித்து முக்கியமானவற்றுக்கு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றும் எண்ணத்தோடு வெற்றியாளர்கள் செயல்படுவார்கள்.
சில சமயங்களில் தமக்கு போதுமான நேரம் கிடைத்திட வெற்றியாளர்கள் ஒரு வேலையை பிரதிநிதித்துவப்படுத்தி பிறருக்கு பிரித்து கொடுப்பார்கள். இதனால் தேவையான விஷயத்தில் கூடுதல் கவனமும் செலுத்த முடியும் பிறரது பலத்தையும் அறிய முடியும்.
ஒரு வேலையை வெற்றிகரமாக முடித்திட கவனச்சிதறலை தவிர்க்க விரும்புவார்கள். இதற்கு முடிந்தவரை செல்போனை சைலன்ட் மோடில் வைப்பது நல்லது. ஒரு வேலையை செய்து முடிக்கும் வரை அதில் முழு கவனமும் இருக்க வெற்றியாளர்கள் இந்த தந்திரத்தை பயன்படுத்துகின்றனர்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com