உலக கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரராக உருவெடுத்துள்ள பும்ராவை இந்திய ரசிகர்கள் அனைவருக்குமே பிடிக்கும். இக்கட்டான சூழலில் அணி தடுமாறும் போதெல்லாம் காப்பாற்றுவதற்காக பிறந்த வீரன் போல் பும்ரா செயல்பட்டு ஜெயிக்க வைப்பார். டி-20 உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக பும்ராவை சொல்லலாம். அவரது பவுலிங் ஆக்ஷனை கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழப்பது வழக்கமாகிவிட்டது. ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் தொடங்கி பீச் கிரிக்கெட் வரை பலரும் பும்ராவின் ஆக்ஷனை பின்பற்றி பந்துவீசுகின்றனர். சமீபத்தில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் தங்கள் நாட்டில் பும்ராவை போல் பந்துவீசும் சிறுவனின் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதை பும்ராவும் எக்ஸ் வலைதளத்தில் ரீபோஸ்ட் செய்தார்.
Wah jee wah look at that control and action exactly like the great @Jaspritbumrah93 video of the day for me . #crickethavenoboundiershttps://t.co/Ut215HD3iB
— Wasim Akram (@wasimakramlive) July 15, 2024
இந்த நிலையில் பள்ளி சீருடையில் சிறுமி ஒருவர் பும்ரா போலவே பந்துவீசும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சொல்லப்போனால் பும்ராவை விட அப்பெண் வேகமாக பந்துவீசுவது போல் தெரிகிறது. பள்ளி சீருடையில் இருந்தாலும் பும்ராவின் ரன்- அப், பவுலிங் ஆக்ஷன், அசைவு அப்பெண்ணிடம் காணப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் உலா வந்தாலும் அப்பெண்ணின் முழு விவரம் தெரியவில்லை.
Bowling action like Bumrah ✅
— AIN (Parody) (@aiamit1) August 18, 2024
Looks like Bumrah✅ pic.twitter.com/8ySoqOOzA9
பந்துவீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கில் கலக்குகிறார். தனக்கு வீசப்பட்ட சுழற்பந்துவீச்சை ஸ்வீப் செய்தும், மிட் விக்கெட் திசைக்கும் டைமிங்கில் அற்புதமாக புல் செய்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் இவரை யார் என கண்டறிந்து முறையான பயிற்சியும் ஊக்கமும் அளித்தால் எதிர்காலத்தில் இந்திய அணிக்கு சிறந்த வீராங்கனை கிடைக்க வாய்ப்புள்ளது என பதிவிட்டுள்ளனர். சிலர் விளையாட்டுத்தனமாக பும்ராவை போலவே நோ பால் போடும் விதமாக கிரீஸிற்கு வெளியே கால் வைத்து பந்துவீசுகிறார் என கமெண்ட் செய்துள்ளனர். வீடியோவை பார்க்கும் மேலும் ஒரு அதிர்ச்சி உள்ளது.
அப்பெண் தோற்றத்திலும் பும்ராவை போலவே உள்ளார். பேச்சு தொனியும் ஏறக்குறைய பும்ரா தான். கூடுதலாக கண்ணாடி மட்டும் அணிந்திருக்கிறார். இந்த வீடியோவின் கீழே பலரும் பிசிசிஐ-யை டேக் செய்து உடனடியாக இவரை கண்டுபிடித்து பயிற்சி அளியுங்கள் என பதிவிட்டுள்ளனர். முன்னொரு காலத்தில் ஜாம்பவான் சச்சினின் பேட்டிங் ஸ்டான்ஸ் எந்தளவிற்கு பிரபலமாக உள்ளதோ அதே அளவிற்கு தற்போது பும்ராவின் பவுலிங் ஆக்ஷன் பிரபலமாக உள்ளது. வார நாட்களில் கிரிக்கெட் மைதானங்களுக்கு சென்றால் 6 முதல் 30 வயது வரை பலரும் பும்ராவை போல் பந்துவீச முயல்வதை பார்க்க முடிகிறது. இந்த சிறுமி ஒரே விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பும்ராவை போல் அடிக்கடி காயமடைவதை தவிர்த்தால் இந்தியாவின் தலைசிறந்த வீராங்கனையாக உருவெடுக்கலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com