தைப்பூசம் என்பது தமிழ் கடவுளான முருனை தமிழர்கள் வணங்கி கொண்டாடும் ஒரு திருவிழா ஆகும். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் தைப்பூசம் கொண்டாடப்படும். சிவபெருமானின் பிள்ளையை நாம் தமிழகத்தில் முருகன் என்று அழைக்கிறோம். வட இந்தியாவில் கார்த்திகேயா என்று அழைக்கின்றனர்.
கடல் கடந்தும் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் தைப்பூசம் கொண்டாட்டங்கள் களைகட்டும். இதை மையமாகக் கொண்டு தமிழ் சினிமாவில் பாடலும் வந்திருக்கிறது. ஆம் அஜித் நடித்த பில்லா படத்தில் இடம்பெற்ற சேவல் கொடி பறக்குதடா பாடலையே குறிப்பிடுகிறேன். இந்த வருடம் தைப்பூச விழா ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பெளணர்மியும் ஒன்றாக வரும் நாள் தான் தைப் பூசம். சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானை போற்றும் வகையில் தைப்பூச திருவிழா பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்படு வருகிறது.
இதையொட்டி தமிழகத்தின் அறுபடை வீடுகளான மதுரை மாவட்டம் திருப்புரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், தஞ்சை சுவாமிநாதசுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், மதுரை பழமுதிர்சோலை முருகன் கோயில் மற்றும் ஏராளமான முருகன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
தை பூசம் தேதி மற்றும் நேரம்
பூசம் நட்சத்திரம் தொடக்கம் - ஜனவரி 25,2024 - காலை 8:16
பூசம் நட்சத்திரம் முடிவு - ஜனவரி 26,2024 - காலை 10:28
தைப்பூசம் தை மாதத்தின் முதல் பெளர்ணமி தினமான பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். இந்த நன்நாளில் முருக பக்தர்கள் முருக கோயில்களை நோக்கி பாதையாத்திரை செல்வர். பல பக்தர்கள் பால் குடம் எடுத்து, காவடி தூக்கி, அலகு குத்தி, தீ மிதித்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். இதற்காக முருக பக்தர்கள் விரதம் இருப்பதும் உண்டு. தமிழகத்தில் தைப்பூசத்திற்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பூச திருவிழா இந்தியாவில் மட்டுமல்ல மலேசியா, சிங்கப்பூரில் கொண்டாடப்படுகிறது. அங்கும் மக்கள் விரதம் அனுஷ்டித்து முருகப் பெருமானை வழிபடுகின்றனர். உலகத்திலேயே மிகப்பெரிய முருகர் சிலை மலேசியாவில் இருக்கிறது. அதை மிஞ்சும் வகையில் சேலத்தில் முருகருக்கு சிலை கட்டப்பட்டுள்ளது.
தைப்பூசம் 2024 : வரலாறு
இந்து மத சாஸ்திரங்களின்படி முருகர் சூப்ரதாமன் என்ற கொடூரமான அரக்கனுடன் செய்தார். இதற்கு பின்னணியும் உண்டு. மூன்று பிசாசுகள் உலகை இரக்கமின்றி துன்புறுத்திக் கொண்டிருந்தன. இதற்கு முடிவு கட்ட சிவபெருமானின் ஆற்றலை கொண்ட முருகப் பெருமான் தனது தாய் பார்வதி தேவியிடம் இருந்து வேல் ஒன்றை பெற்றார். அந்த வேல் தீமையை வெல்லும் சக்தியை உள்ளடக்கியது. போர்க்களத்தில் முருகர் சூரபத்மனை வேலால் குத்தி வதம் செய்தார். இவ்வாறாக அசுரனை ஒழித்து உலகத்தில் அமைதி நிலைநாட்டப்பட்டது. அன்று முதல் தை பூசம் கொண்டாடப்படுகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation