
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 - 2024ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்போரவையில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பெண்களுக்கான மாதம் ரூ. 1000 உரிமைதொகை தொடங்கி பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகின. அதுக் குறித்து இங்கு விரிவாக பார்ப்போம்.
திமுக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கான உரிமைத்தொகை திட்டம் அமலுக்கு வரும் தேதி வெளியாகியுள்ளது. கூடவே மகளிர் குழு கடன், இலவச பேருந்து பயணம் என பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் பல அறிவிப்புகள் இந்தாண்டு பட்ஜெட்டில் இடம் பிடித்துள்ளன.
தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார். பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் மார்ச் 23 முதல் 27 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு பொது தேர்தலில் திமுக அரசு வழங்கிய தேர்தல் கோரிக்கையில் மிகவும் முக்கியமானது பெண்களுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம். இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என பெண்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்.15 முதல் மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் அமலுக்கு வருவதாக பட்ஜெட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க, ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். தகுதிவாய்ந்த மகளிர்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik, google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com