தீபாவளி பண்டிகை வரக்கூடிய சூழலில் நாளுக்கு நாள் உயரும் தங்கத்தின் விலையால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். சமானிய மக்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு தங்கத்தின் விலையானது ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் தங்கத்தின் விலையானது வரக்கூடிய நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வணிக துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: வார இறுதியில் மீண்டும் எகிறிய தங்கம்; ஒரே நாளில் ரூ.320 உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இதுவரை யாரும் எதிர்பார்க்க வகையில் தங்கத்தின் விலையானது கிராம் ரூ. 11 385க்கும், ஒரு பவுன் தங்க நகையானது ரூ. 91 ஆயிரத்து 080 விற்பனையாகிறது. காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலையானது ஒரு கிராமிற்கு ரூ.11, 300க்கும் விற்பனையான நிலையில் ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்து 400க்கு விற்பனையாகிறது. நேற்றைக்கு ஒரு கிராம் தங்கமானது ரூ.11 ஆயிரத்து 200 விற்பனையான நிலையில் சட்டென்று ரூ. 185 உயர்வானது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை ; மகிழ்ச்சியில் நகைப் பிரியர்கள்!
தங்கத்தின் விலையானது ஒரே நாளில் ஏற்றத்தைக் கண்டுவருவதால் இனி தங்க நகைகள் வாங்க முடியுமாம்? என்ற கேள்வியை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் எப்போதும் குறையும் என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகளவில் எழுந்துள்ளது. இன்றைக்கு ஒரு பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.90 ஆயிரத்து 400 ஐ எட்டியுள்ள நிலையில் அடுத்த ஆண்டிற்குள் அதாவது 2026 ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்திற்கு மேல் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு கிராம் அல்லது உங்களால் முடிந்தவரை நகைகளாகவும், தங்க டாலர்களாகவும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது எனவும் தெரிவிக்கின்றனர்.
Image Credit - freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com