தேர்வு காலத்தில் மன அழுத்தம் ? இந்த விஷயங்களை பின்பற்றுங்க மாணவர்களே...

தேர்வு கால மன அழுத்தம் மாணவர்களுக்கு பெரும் பிரச்னையாகும். இதை தவிர்ப்பதற்கு சில உதவிக்குறிப்புகள் இங்கே...

relieve exam stress
relieve exam stress

பள்ளி, கல்லூரி பருவத்தில் தேர்வு அறிவிப்பின் போது பயம், தேர்வு நாட்கள் நெருங்க நெருங்க மன அழுத்தம், தேர்வு நாளில் கவலை, தேர்வு முடிவுகளை அறிவிக்கும் நாளில் பயம் என மாணவர்கள் தேவையின்றி சிரமத்திற்கு ஆளாகின்றனர். தேர்வில் நன்றாக மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் வீட்டில் திட்டுவார்கள் என்ற எண்ணத்தில் மாணவர்கள் அச்சம், மன அழுத்தம் ஏற்படுகிறது. இதை சரியாக கையாள தவறினால் மாணவர்களின் உடல் மற்றும் மன நலன் பாதிக்கப்படும். எனவே தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் சிறப்பாக செயல்படுவதற்கு சில முக்கியமான விஷயங்கள் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

stress relief techniques for students

சரியான திட்டமிடல்

தேர்வு அறிவித்த அன்றைய தினமே அடுத்த 20-30 நாட்களுக்கான அட்டவணையை உருவாக்குங்கள். படிக்க வேண்டிய பாடத்திட்டங்களுக்கு போதுமான நேரம் ஒதுக்கி சிறு சிறு இடைவேளை எடுத்துக் கொள்ளவும். சரியாகத் திட்டமிடுவதன் மூலம் கவனம் சிதறல் மற்றும் சோர்வு தவிர்க்கலாம்.

மூச்சுப்பயிற்சி

தினமும் பத்து நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் மனதை அமைதிப்படுத்தி தேர்வு மீதான கவலையை தடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்வது மன அழுத்தத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

உடல் செயல்பாடு

தேர்வுக்கு மத்தியிலும் அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் எண்டோர்பின் சுரந்து மனநிலை மேம்படும். விறுவிறுப்பான நடைபயிற்சி, யோகா மற்றும் உடற்பயிற்சி என அனைத்துமே உடல் செயல்பாடு தான்.

போதுமான உறக்கம்

ஒவ்வொரு இரவும் போதுமான உறக்கத்தை உறுதி செய்யுங்கள். உறக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மன அழுத்தம் அதிகரிக்கும். தேர்வு நேரம் என்பதால் தினமும் 8 மணி நேர தூக்கத்தை உறுதி செய்யவும்.

ஊட்டச்சத்து

உணவுப்பழக்கத்தில் சரிவிகித ஊட்டச்சத்து முறையை கடைபிடிக்கவும். அதிகளவு காபி மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்க்கவும்.

நேர மேலாண்மை

ஒரு வேலையை முடிக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அதை துல்லியமாக முடித்துவிடுங்கள். கூடுதல் நேரம் எடுக்காதீர்கள். நேர மேலாண்மை படிக்கும் போது மட்டுமல்ல தேர்வு எழுதும் நேரத்திலும் அவசியம்.

குடும்ப நேரம்

தேர்வு என்று வந்துவிட்டால் வீட்டில் உள்ள அனைவரும் உங்களை படிக்கட்டும் என தனியாக விட்டுவிடுவார்கள். ஆனால் பல நேரங்களில் அவர்களது உதவி உங்களுக்கு தேவைப்படும். படிக்கும் நேரத்தை தவிர்த்து குடும்ப உறவுகளுடன் சிறிது நேரம் செலவிடுங்கள்.

வழிகாட்டி

தேர்வுக்கு முந்தைய மற்றும் பிந்தைய பயத்தை தவிர்க்க ஒரு வழிகாட்டியை கண்டுபிடியுங்கள். நல்ல அனுபவமிக்க நபர் தேர்வு பயத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்க உதவுவார்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP