சமையலறையில் பெண்கள் மசாலா பொருட்கள், மாவு போன்றவற்றை சேமித்து வைப்பார்கள். ஆனால் இந்த அனைத்து பொருட்களிலும் மாவு மிக முக்கியமானது. ஏனென்றால் பூரி, சப்பாத்தி, இனிப்புகள் போன்ற பலவற்றை செய்ய மாவு தான் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் கோதுமை மாவுக்குப் பதிலாக பல தானிய மாவு, குறிப்பாக அரிசி மாவு போன்றவற்றையே பெண்கள் விரும்புகின்றனர்.
மீண்டும், மீண்டும் கடைக்கு செல்லவேண்டுமென்பதற்காக பெண்கள் அரிசி மாவை அதிகளவில் வாங்கி, சேமித்து வைத்தாலும், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அரிசி மாவில் பூச்சிகள், புழுக்கள் வந்துவிடுகின்றன.
சில நேரங்களில் மாவில் பூச்சிகள் அதிகமாக வந்துவிட்டால், அவற்றை அகற்றுவது சற்று கடினமாக இருக்கும். அதனால்தான் பெண்கள் அரிசி மாவை தூக்கி எறிந்துவிடுகின்றனர். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் இன்று நாங்கள் உங்களுக்காக சில சூப்பரான குறிப்புகளை கொண்டு வந்துள்ளோம், இவை பூச்சிகள் வருவதை தடுப்பதோடு, மாவையும் கெடாமல் பாதுகாக்கும்.
சல்லடையை பயன்படுத்துதல்
அரிசி மாவில் உள்ள பூச்சிகளை நீக்க மாவு சல்லடையை பயன்படுத்தலாம். இருப்பினும், நீங்கள் கடைகளில் பல வகையான சல்லடைகளைக் காணலாம், ஆனால் நீங்கள் ஒரு மெல்லிய சல்லடையைப் பயன்படுத்த வேண்டும். இது பூச்சிகளை முற்றிலுமாக அகற்றும், உங்கள் மாவும் சுத்தமாக மாறிவிடும்.
அரிசி மாவை சீக்கிரம் சுத்தம் செய்ய வேண்டுமானால், பெரிய சல்லடையைப் பயன்படுத்துங்கள். அப்படி செய்தால், பூச்சிகளை விரைவாக அகற்றிவிடலாம்.
சூடான இடத்தில் வைத்தல்
அரிசி மாவில் இருந்து பூச்சிகள் வெளியேறவில்லை என்றால், மாவை வெப்பமான அல்லது சூடான இடத்தில் வைத்திருப்பது நல்லது, ஏனென்றால் அப்போது, மாவிலிருந்து பூச்சிகள் வெளியேறிவிடும். இதற்காக, நீங்கள் காலை முதல் மாலை வரை முழு மாவையும் சூரிய ஒளியில் வைக்கலாம். உங்கள் முழு பாத்திரத்தையும் பிரகாசமான சூரிய ஒளி படும் வகையில் நாள் முழுவதும் வைப்பது நல்லது.
வெயிலில் பாத்திரத்தை வைத்த பிறகு, சல்லடை மூலம் மாவை சலித்துவிட்டு, பிறகு பாத்திரத்தில் சேமிக்கவும், அந்த பாத்திரம் ஈரமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஈரமானால் மாவு கெட்டுவிடும்.
இலவங்கப்பட்டை பயன்படுத்துதல்
இது உங்களுக்கு ஆச்சர்யமாக கூட இருக்கலாம், ஆனால் புழுக்களை அகற்ற இலவங்கப்பட்டை மிகவும் உதவியாக இருக்கிறது என்பது தான் உண்மை. இலவங்கப்பட்டையின் வாசனை பூச்சிகளை அண்டவிடாது. இலவங்கப்பட்டையின் வாசனைக்கு பூச்சிகள் ஓடிவிடும். எனவே நீங்கள் ஒரு துண்டு இலவங்கப்பட்டையை மாவு வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு மூடிவிடுங்கள்.
இவ்வாறு செய்தால் உங்கள் மாவும் புதியதாக இருக்கும். அதோடு, நீங்கள் இலவங்கப்பட்டையை மாவில் கலந்துவைக்கலாம், இது உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.
சேமிக்க உதவும் டிப்ஸ்
- நீங்கள் அரிசி மாவை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க விரும்பினால், இந்த சேமிப்பு குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.
- அரிசி மாவை சேமிக்க எப்போதும் சுத்தமான மற்றும் காற்று புகாத பாத்திரங்களை பயன்படுத்தவும்.
- நீங்கள் மாவை சேமிக்கும் போது, கிராம்புகளை பாத்திரத்தில் போடவும். இது பூச்சிகள் வருவதை தடுக்கும், மாவை பிரெஷ்ஷாக வைத்திருக்கும்.
- மாவை பிரெஷ்ஷாக வைத்திருக்க வேப்பிலைகளையும் பயன்படுத்தலாம்.
- சேமித்து வைக்க இடம் இல்லையென்றால், குறைந்த அளவில் அரிசி மாவை வாங்குங்கள்.
- மாவை எடுப்பதற்கு முன்பு, உங்கள் கைகள், சல்லடை, தட்டு, பாத்திரம் உள்ளிட்டவை ஈரமாக இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: shutterstock, freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation