தசரதனின் முதல் மகனான ஸ்ரீ ராமரின் (விஷ்ணுவின் 7வது அவதாரம்) பிறப்பு ராம நவமியாக ராம பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ராம நவமி ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமைத்திருக்கிறது. சராயு நதியில் ராமரின் பக்தர்கள் புனித நீராடி கோயில்களுக்கு சென்று பஜனை பாடி ராமரை வழிபடுவர். ராமரின் பிறப்பிடமாக கூறப்படும் அயோத்தியில் கொண்டாட்டங்கள் களைகட்டும். ராம நவமி நாளில் ராம பக்தர்களுக்கு அனுப்ப வேண்டிய வாழ்த்துகள் இங்கே...
ஸ்ரீ ராம மந்திரங்கள்
- "ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"
- ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ
- ஓம் க்லீம் நமோ பகவதயே ராமசந்திராய சகலஜன வஸ்யகராய ஸ்வாஹா

ராம நவமி வாழ்த்து 2025
- பகவான் ராமரின் தெய்வீக ஆசீர்வாதம் எப்போதும் உங்களை வழிநடத்தட்டும்... ராம நவமி வாழ்த்துகள்
- மங்களகரமான ராம நவமியில் உங்கள் வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்கள், அமைதி மற்றும் செழிப்பு அதிகரிக்கட்டும். ராம நவமி நல்வாழ்த்துகள்
- ராம நவமி ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல தீய எண்ணங்கள், எதிர்மறை சிந்தனைகள், பேராசை மற்றும் கோபம் அழித்திடும் நாள். ராம நவமி வாழ்த்துகள்
- மன அமைதியும், மனதில் நேர்மறை எண்ணங்களும் அதிகரிக்க ஸ்ரீ ராம நவமி நாளில் வாழ்த்துகிறோம்.
- ஸ்ரீ ராமபிரானின் பிறந்த நாளான இந்த நன்னாளில் அனைவருக்கும் அவரது அருளும் ஆசியும் குறைவின்றி கிடைக்க ராம நவமி வாழ்த்துகள்
- பகவான் மகாவிஷ்ணு அயோத்தியில் ஸ்ரீ ராமனாக அவதரித்த இந்நன்னாள் முதல் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பெருகட்டும்.
- ராம நவமி பண்டிகை நம் ஆன்மாவையும் மனதையும் ஒளிரச் செய்யட்டும். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ராம நவமி நல்வாழ்த்துகள்!
- உங்கள் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியான மற்றும் வளமான எதிர்காலம் அமைந்திட ராம நவமி வாழ்த்துகள்
- ராம நவமியில் உங்கள் உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன். இந்த ஆண்டு நீங்கள் உங்கள் இலக்குகளை வெற்றிகரமாக அடைய ராமர் உங்களுக்கு அருள் புரிவார். ராம நவமி நல்வாழ்த்துகள்!
- ஸ்ரீ ராம பிரானின் பிறந்த நாளான இந்த நன்னாளில் அனைவருக்கும் ஆரோக்கியமும் ஆசியும் கிடைக்கப்பெற ராம நவமி நல்வாழ்த்துகள்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation