இந்து பண்டிகையான ரக்ஷா பந்தன் வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி பெளர்ணமி அன்று ரக்ஷா பந்தன் வருகிறது. உடன்பிறப்புகளுக்கு இடையிலான உன்னத உறவை ரக்ஷா பந்தன் உணர்த்துகிறது. இந்த கொண்டாட்டத்தின் வரலாறு, ரக்ஷா பந்தன் கொண்டாடும் நேரம் போன்றவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்... ரக்ஷா பந்தன் அன்று நல்ல நேரத்தில் உடன்பிறந்தவர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டுவது விஷேசமாக கருதப்படுகிறது. ராக்கி கட்டுவதற்கும் உரிய நேரம் இருக்கிறது.
சென்னை - மதியம் 1:30 முதல் இரவு 8:46 வரை
ரக்ஷா பந்தன் 2024 : வரலாறு
ரக்ஷா பந்தன் பற்றி தெரிந்து கொள்வதற்கு நாம் இந்து இதிகாசமான மகாபாரதத்தை படித்திருக்க வேண்டும். ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் மகாபாரத்திலிருந்து உருவானது. புராணங்களின் படி கிருஷ்ண பகவான் சுதர்ஷன சக்கரத்தில் தற்செயலாக தன்னை காயப்படுத்தி கொள்கிறார். இதைக் கண்ட திரெளபதி தனது சேலையிலிருந்து துணியைக் கிழித்து காயம்பட்ட இடத்தில் கட்டி இரத்தப்போக்கை நிறுத்துகிறார். திரெளப்தி வெளிப்படுத்திய அன்பின் காரணமாக திரெளபதியை எப்போதும் பாதுகாப்பேன் என கிருஷ்ணர் உறுதியளிக்கிறார். ஹஸ்தினாபூர் அரசவையில் கெளரவர்கள் திரெளபதியின் ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்த முயன்ற போது கிருஷ்ணர் அதை தடுத்து தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்.
மற்றொரு புராணக்கதையின்படி ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் இந்திராணி தேவி மற்றும் இந்திர கடவுளுடன் தொடர்புடையதாகும். இது புனிதமான கயிற்றின் சக்தியை விவரிக்கிறது. கொடூரமான அரக்கர்களின் சவாலை ஏற்று இந்திரர் போர்க்களம் செல்கிறார். அரக்கர்களின் சக்திக்கு ஈடு கொடுக்க முடியாது எனத் தெரிந்த நிலையில் இந்திராணி தேவி இந்திரரின் கையில் ரக்ஷா எனும் புனித கயிற்றை கட்டுகிறார். இதன் விளைவாக அரக்கர்களை போரிலும் வீழ்த்துகிறார்.
இந்த புராணங்களின் அடிப்படையில் ரக்ஷா பந்தன் இந்துக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இது உடன்பிறப்புகளுக்கு இடையேயான அன்பையும், பாசத்தையும் உணர்த்துகிறது. மேலும் இந்த நாளில் திருமணமான பெண்கள் தாய் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பாகவும் அமைகிறது.
ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்
ரக்ஷா பந்தன் அன்று சகோதரிகள் தங்கள் உடன்பிறந்த சகோதரனின் கையில் ராக்கி எனும் புனித கயிறை கட்டி ஆரத்தி எடுத்து திலகமிட்டு கொண்டாடுகின்றனர். அப்போது சகோதரியின் அன்பையும் பாசத்தையும் உணர்ந்து சகோதரன் அவளை எல்லா பிரச்னைகளிலிருந்தும் பாதுகாப்பதாக உறுதியளிக்கிறான். இந்த காலத்தில் சகோதரர்கள் கூட சகோதரியின் கையில் ராக்கி கட்டுகின்றனர். கையில் ராக்கி கட்டினால் காசு அல்லது பரிசு கொடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. அதுமட்டுமல்ல உடன்பிறந்தவர்களை சுற்றுலா அழைத்து செல்வது, அவர்களுக்கு பிடித்தமான உணவை சமைப்பது என பல விதங்களில் ரக்ஷா பந்தனை கொண்டாடலாம்.
உடன்பிறந்தவனுக்கு மட்டுமே ராக்கி கட்ட வேண்டுமா ? உங்களை மதித்து அன்பு காட்டி பாதுகாப்பாக உணர வைக்கும் தோழனுக்கும் ரக்ஷா பந்தன் நாளில் ராக்கி கட்டலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation