காதலியின் மனதை உருக்கும் ப்ரோபோஸ் டே கவிதைகள்

ப்ரோபோஸ் டே அன்று எளிய முறையில் காதல் உறவிடம் கவிதைகள், வாழ்த்துகள் சொல்லி காதலை உறுதிப்படுத்துங்க...
propose day messages

நீங்கள் இருவரும் ஏற்கெனவே காதலர்களாக இருந்தால் அதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல ப்ரோபோஸ் டே சிறந்த வாய்ப்பாகும். அன்பான ப்ரோபோஸல்கள் மூலம் ப்ரோபோஸ் டே-ஐ கூடுதல் சிறப்பாக்கலாம். அதற்கான வாழ்த்துக்கள், கவிதைகள், குறுஞ்செய்திகள் இங்கே...

propose day wish

  • தேடித் தேடி கிடைத்த என் பொக்கிஷம் நீ... தெரியாமல் கூட தொலைக்க விருப்பமில்லை எனக்கு...
  • உன் கண் அசைவுக்காக காத்துக் கிடக்கிறேன்... என் இதயத்தை உன்னிடம் பறி கொடுக்க...
  • உன்னிடம் இடைவெளி விட்டு பேச நான் விரும்பவில்லை... நாள்பொழுதும் நீங்காது இடைவிடாமல் பேசவே விரும்புகிறேன்... என்னை ஏற்று கொள்வாயா ஆருயிரே?
  • உனக்காக எதையும் விட்டுக் கொடுத்து வாழ்வேனே தவிர எதற்காகவும் உன்னை விட்டுக் கொத்து வாழ மாட்டேன்!
  • காதல் கசப்பானது என நினைத்தேன்... உன்னைக் காணாத வரையில்...!
  • நீ நிலவும் அல்ல... நட்சத்திரமும் அல்ல... இவைகளை எல்லாம் அள்ளி சூடிக்கொள்ளும் வானம் நீ..!
  • இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் மனதுக்கு பிடித்தவரை மறக்காது காரணம் இதயத்திற்கு நடிக்கத் தெரியாது! துடிக்க மட்டுமே தெரியும்...
  • அன்பே! நீ விளக்காக இருந்தால் நான் சுடராக இருப்பேன்...
  • பொருள் புரியாத கவிதை வெறும் கிறுக்கல் தான்... உனக்குப் புரியாத என் காதலும் வெறும் கற்பனை தான்...
  • காதல் என்ற கடலில் மூழ்கினேன் என் முத்தாகிய உன்னை எடுக்க! உன் அன்பின் ஆழம் அதிகரிக்க மூழ்கிக் கொண்டேயிருக்கிறேன்... நீயும் கிடைப்பதாயில்லை... நானும் விடுவதாயில்லை...
  • உறவாக இருந்தால் என்றோ மறந்திருப்பேன்... உயிரோடு அல்லவா கலந்துவிட்டாய்...
  • விடுதலையில்லா சட்டம் வேண்டும் உன் காதல் பிடிக்குள் அகபட்டுக்கிடக்க...
  • நீ எதிரில் வரும் பொழுதெல்லாம் என் எதிர்காலம் வருவதாய் உணர்கிறேன்...
  • சருகாய் உதிர்ந்து கொண்டிருந்த என்னை அன்பெனும் நீர் ஊற்றி பசுமை ஆக்கியவள் நீ...!
  • 100 வயது ஆயுள் வேண்டாம் உன்னருகில் இருக்கும் வரை ஆயுள் இருந்தால் போதும்...
  • தொலைந்த என்னை மீட்டு விடலாம் என்று தேடி பார்க்கிறேன் ஆனால் முடியவில்லை... தொலைந்த இடம் உன் இதயம் தான்... மீட்டுத்தருவாயா என்னை என்னிடம்
  • அருகில் இருந்தால் அணைந்து மகிழ்வேன்... தொலைவில் இருந்தால் நினைத்து மகிழ்வேன்... என்றும் உன் நினைவில்
  • அன்று நீ என்னை எதார்த்தமாய் கடந்த போது... நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை... இன்று நீ என் எதிர்காலமாக அமைவாய் என்று...
  • மாறாத மனதோடும்! மறக்காத நினைவோடும்! மறையாத காதலோடும்! மரணம் வரை உனக்காகவே தொடரும் என் வாழ்வின் பயணம்! அன்பே என் காதலை ஏற்பாயா ?

மேலும் படிங்கரொமான்டிக் பரிசோட ப்ரோபோஸ் பண்ணுங்க! லவ் சக்சஸ்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP