சென்னையில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்களை இயக்க முடிவு! பெண்கள் நலனுக்காக...

சென்னையில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக தமிழக அரசு இளஞ்சிவப்பு ஆட்டோக்களை அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்கப்படவுள்ளன.
image

தமிழக அரசு பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது. ஏற்கெனவே பெண்களின் நலனை உறுதி செய்யும் பொருட்டு இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை திட்ட, பிற ஊர் பெண்கள் சென்னையில் பாதுகாப்பாக தங்கி பணியாற்ற தோழி விடுதி ஆகிய திட்டங்களை தமிழக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. பெண்களின் பாதுகாப்பில் தமிழகம் சிறந்து விளங்கும் நிலையில் அதை மேலும் வலுப்படுத்தும் வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஒரு புதிய முன்னெடுப்பாக இளஞ்சிவப்பு ஆட்டோக்களை அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

pink autos chennai

பிங்க் (எ) இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்

இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன. அவசர காலங்களில் புகார் பெறப்பட்டடவுன், காவல்துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும் பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும் என அரசு நம்புகிறது

இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் : தேவையான தகுதி

  • இத்திட்டத்திற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
  • கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
  • பெண்ணின் வயது 25 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்
  • ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்
  • சென்னையில் குடியிருக்கும் நபராக இருப்பது அவசியம்

மேலும் படிங்க70% பெண்களால் இயங்கும் சிவகாசி பட்டாசு தொழில்... ரூ.300 சம்பளத்தால் கவலையளிக்கும் வாழ்வாதாரம்

இளஞ்சிவப்பு ஆட்டோவுக்கு மானியம்

இத்திட்டத்திற்கென சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழக அரசு CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்கு வங்கிகளுடன் தொடர்பு அளிக்கப்படும்.

இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்திற்கு விண்ணப்பம்

சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாவட்ட சமூக நல அலுவலருக்கு அடுத்த மாதம் 23ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP