நோயற்ற வாழ்க்கை மற்றும் குறைவற்ற செல்வம் தரும் ஏகாதசி விரதம்!!

சகல விதமான சௌபாக்கியங்களையும் தரும் ஏகாதசி விரதம்: இதன் தனித்துவமான மகத்துவங்களை பற்றிப் படித்தறிந்து பயனடையலாம்.

ekadasi big

ஏகாதசி 2022: நவம்பர் மாத ஏகாதசியின் தேதிகள், நேரங்கள், முக்கியத்துவம், விரத முறைகள் மட்டும் பலன்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நவம்பர் மாத ஏகாதசியின் தேதிகள் மற்றும் நேரங்கள்

  • தேவ் உதானி ஏகாதசி நடைபெறும் நாள்-வெள்ளிக்கிழமை, நவம்பர் 4 2022.
  • ஆரம்பம் நேரம் - நவம்பர் 3, மாலை 07:30 மணிக்கு ஆரம்பமாகிறது.
  • முடியும் நேரம் - நவம்பர் 4, மாலை 06:08 மணிக்கு நிறைவடைகிறது.

ஏகாதசியின் முக்கியத்துவம்

ஒரு வருடத்தில் 24 வகையான ஏகாதசிகள் வரும், இவை அனைத்தும் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களுடன் தொடர்புடையவை. ஏகாதசி அன்று சில உணவு விதிகளுடன் உண்ணாவிரதம் கடைபிடிக்கப்படுகிறது.இது மன ஆற்றலைச் சரியான திசையில் செலுத்துவதற்கும், கெட்ட செயல்களைத் தவிர்ப்பதற்கும் பின்பற்றப்படுகிறது.

ஆன்மீக ரீதியாக, ஏகாதசி பதினொரு புலன்களைக் குறிக்கிறது, இது ஐந்து புலனுருப்புகள், ஐந்து செயல் உறுப்புகள் மற்றும் ஒரு மனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. பதினொரு புலன்களைக் கட்டுப்படுத்தி, அனுமதிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட்டு மக்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.இந்நாளில் விரதம் இருப்பவர்கள் கிரக தோஷங்கள் நீங்கி, மகிழ்ச்சி மற்றும் மன அமைதியைப் பெறுவதாகவும் கருதப்படுகிறது.

ஏகாதசி விரதமுறைகள்

ekadasi

இவ்விரத முறையை ஆண், பெண், ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடுகளின்றி எல்லோரும் கடைப்பிடிக்கலாம்.

1. ஏகாதசி விரதம் இருக்க விரும்புபவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று, ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும்.

2. அடுத்த நாள் ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும். முழு நாளும் விரதம் இருந்து விஷ்ணுவை நினைத்துத் தியானிக்க வேண்டும். மகாவிஷ்ணுவின் புகழ்பாடும் பாடல்களைப் பாடலாம்.

3. ஏகாதசி அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை துதி செய்ய வேண்டும்.

4. மறுநாள் காலைத் துவாதசி அன்று, மகாவிஷ்ணு பெருமாளின் நாமத்தைச் சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.

5. தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதம் இருப்ப வர்களின் சிந்தனையில், இறைவனின் நினைப்பு மட்டுமே இருக்க வேண்டும்.

6. ஏகாதசி அன்று பெருமாள் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபாடு செய்யலாம்.

7. அல்லது, அவர்கள் வீட்டில் இருந்தபடியே பகவானின் படத்திற்கு மாலை மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து, ஐந்து வகையான பழங்கள் மற்றும் இனிப்புகளை நெய்வேதியம் செய்து, தீபம் ஏற்றிப் பிரார்த்தனை செய்யலாம்.

ஏகாதசி விரத மந்திரம்

  • விஷ்ணு மந்திரம்: ஓம் நமோ பகவதே வாசுதேவாய
  • கிருஷ்ண மகா-மந்திரம் : ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே

ஏகாதாசி விரதத்தின் பலன்கள்

ekadasi

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்ற பழமொழியும் உண்டு.ஏகாதசி அன்று விரதமுறையைப் பின்பற்றி வழிபாடு செய்யப்படுவதால் உடல் மற்றும் உள்ளம் தூய்மை அடைகிறது.மேலும் மனிதனின் மனதில் உண்டாகும் கோபம், பகை, பொறாமை விலகி எண்ணங்கள் தூய்மை அடைகிறது. இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும்.பாவநிவர்த்தி கொடுக்கும் இந்நாளில் பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும். இல்லறம் இனிக்கும்.

இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்யலாம்.ஏகாதசி விரதத்தின் பலன்களைப் பெற முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம்.அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP