மாதவிடாய் சீக்கிரம் வர இனி மாத்திரை தேவையில்லை; இதை சாப்பிட்டால் போதும்

எந்த பக்க விளைவும் இல்லாமல் மாதவிடாயை சீக்கிரமாக வர வைக்கும் ஒரு சூப்பர் வீட்டு வைத்தியம் குறித்து இங்கு பார்க்கலாம். இதற்கு என்ன தேவை என்று பார்த்தால் தேன், வெல்லம் மற்றும் கருப்பு எள்ளு. 
image

ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு சமயத்தில் கோயில் திருவிழாவுக்கு இல்லை என்றால் ரொம்ப நெருங்கின சொந்தம் அல்லது நண்பர்கள் வீட்டு விசேஷத்துக்கோ அவசியம் போக வேண்டியது இருக்கும். அந்த நாட்கள் மாதவிடாய் வர நாட்களாக இருந்தால் அது அவர்களுக்கு தர்ம சங்கடத்திற்க்கு ஆளாக்கும். இதுக்காகவே மாதவிடாய் சீக்கிரம் வர அல்லது தள்ளி போட பலரும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்கள். நாளடைவில் இதனால் உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்த வரிசையில் எந்த பக்க விளைவும் இல்லாமல் மாதவிடாயை சீக்கிரமாக வர வைக்கும் ஒரு சூப்பர் வீட்டு வைத்தியம் குறித்து இங்கு பார்க்கலாம். இதற்கு என்ன தேவை என்று பார்த்தால் தேன், வெல்லம் மற்றும் கருப்பு எள்ளு. இந்த கருப்பு எள்ளு உடம்பில் உஷ்ணத்தை உருவாக்கி சீக்கிரமாக மாதவிடாய் வர வைக்கும் சக்தி கொண்டது. அடுத்ததாக வெல்லம், இதுவும் உங்கள் உடலில் உஷ்ணத்தை உருவாக்கும்.

தயாரிப்பது எப்படி?


ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளு எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, அதற்கு கூடவே ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இது ஒரு வேலைக்கு மட்டுமே சாப்பிடும் அளவு. இதை மொத்தமாகவும் நீங்கள் செய்து வைத்துக் கொள்ளலாம். அப்படி செய்து வைத்து உங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

iStock-1206333393.jpg-16

எப்படி சாப்பிட வேண்டும்?


இந்தக் கருப்பு எள்ளு வெல்லம் கலந்த இந்த நாட்டு மருந்தை உங்கள் மாதவிடாய் காலம் துவங்கும் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே தினமும் காலையில் வெறும் வயிற்றில் மற்றும் மாலை நேரத்தில் சாப்பிட்டு வர வேண்டும். உதாரணமாக வரும் வெள்ளிக்கிழமை உங்கள் மாதவிடாய் நாட்கள் துவங்கும் என்றால் குறைந்தது மூன்று நாட்கள் முன்பு, திங்கட்கிழமை முதல் இதை சாப்பிட ஆரம்பிக்கலாம். இது உங்கள் உடலில் உஷ்ணத்தை தூண்டி மாதவிடாய் சுழற்சியை சரி செய்து எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் உடனடியாக மாதவிடாய் வர வைக்கும். மாத்திரைகள் பயன்படுத்துவதை விட எப்போதும் வீட்டு வைத்தியங்களை முயற்சித்து பாருங்கள்.

மாதவிடாய்க்கு கருப்பு எள்ளு நன்மைகள்:


மாதவிடாய் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகள் பல பெண்களை பாதிக்கின்றன. இந்த பிரச்சினைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதற்கு கருப்பு எள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கருப்பு எள்ளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகின்றன.

black-sesame-seeds-1296x728-header

இரும்புச்சத்து நிறைந்தது:


கருப்பு எள்ளில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. மாதவிடாயின் போது பெண்களுக்கு இரத்த இழப்பு ஏற்படுவதால், உடலில் இரும்புச்சத்து குறைகிறது. இது இரத்த சோகை (அனீமியா) ஏற்பட வாய்ப்புள்ளது. கருப்பு எள்ளை உணவில் சேர்ப்பதன் மூலம் இரும்புச்சத்தின் அளவை சரிசெய்யலாம்.

மேலும் படிக்க: மாதவிடாய் உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்குமா? இந்த விஷயங்களை செய்ய மறக்காதீங்க

ஹார்மோன் சமநிலை:


கருப்பு எள்ளில் உள்ள லிக்னன்கள் மற்றும் பைட்டோஎஸ்ட்ரோஜன்கள் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. இது ஒழுங்கற்ற மாதவிடாய், PCOS (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) மற்றும் எஸ்ட்ரோஜன் அளவு குறைவு போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது.


மாதவிடாய் வலியை குறைக்கிறது:


கருப்பு எள்ளில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மாதவிடாய் வலி மற்றும் வயிற்று பிடிப்புகளை குறைக்க உதவுகின்றன. இது வயிற்று தசைகளை ஆறுதல்படுத்தி, வலியை குறைக்கிறது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP