மாதவிடாய் உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்குமா? இந்த விஷயங்களை செய்ய மறக்காதீங்க

இந்த மாதவிடாய் நாட்களில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மன அழுத்தம், சோர்வு, எரிச்சல் மற்றும் மனச்சோர்வு போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இது PMS ப்ரீமென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்  போன்ற பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். 
image

ஒரு சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிகமாக கோபம் படுவார்கள், இன்னும் சிலர் அமைதியாக இருப்பார்கள் அல்லது அவர்களை தனிமை படுத்திக்கொள்வார்கள். மாதவிடாய் என்பது பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு இயற்கையான செயல்முறை. இந்த மாதவிடாய் நாட்களில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மன அழுத்தம், சோர்வு, எரிச்சல் மற்றும் மனச்சோர்வு போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இது PMS ப்ரீமென்ஸ்ட்ரல் சின்ட்ரோம் போன்ற பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

ஹார்மோன் மாற்றங்களின் தாக்கம்:


எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் அளவு மாதவிடாய் சுழற்சியில் ஏற்ற இறக்கமடைகிறது. இது மூளையில் உள்ள செரோடோனின் (மகிழ்ச்சி ஹார்மோன்) அளவை பாதிக்கிறது, இதனால் மன அழுத்தம், கோபம் அல்லது மனச்சோர்வு ஏற்படுகிறது. சில பெண்களுக்கு மாதவிடாய் தொடங்கும் முன்பே இந்த உணர்வுகள் தீவிரமாக இருக்கும்.

Heavy-periods-during-the-menopause-Hormone-Health

மாதவிடாய் காலத்தில் மன ஆரோக்கிய பிரச்சனைகள்:

  • PMS: மாதவிடாய் தொடங்கும் 1-2 வாரங்களுக்கு முன்பு மன அழுத்தம், கோபம், மனச்சோர்வு மற்றும் உடல் வலிகள் ஏற்படலாம்.
  • PMDD (ப்ரீமென்ஸ்ட்ரல் டிஸ்போரிக் டிஸார்டர்): இது PMS-ஐ விட கடுமையானது. இதனால் தீவிரமான மனச்சோர்வு, கோபம் மற்றும் உணர்ச்சி ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்.
  • மாதவிடாய் போது மனச்சோர்வு: ஒரு சிலருக்கு மாதவிடாய் நாட்களில் மனம் சோர்வாகவோ அல்லது உணர்ச்சிவம் அதிகம் இருக்கும்.

மாதவிடாய் காலத்தில் மன ஆரோக்கியத்தை பராமரிக்க டிப்ஸ்:


சத்தான உணவு:


மேக்னீசியம் மற்றும் வைட்டமின் B6 நிறைந்த உணவுகள் வாழைப்பழம், கொய்யா, பச்சை காய்கறிகள் போன்ற பழங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும். அதே போல காபி மற்றும் அதிக சர்க்கரை உணவுகளை தவிர்க்கவும்.

f30cdb39-6809-4e7e-b759-97d97594ec26-thumb

வழக்கமான உடற்பயிற்சி செய்யவும்:


மாதவிடாய் நாட்களில் யோகா, நடைப்பயிற்சி அல்லது லேசான உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை குறைக்கும்.


போதுமான உறக்கம்:


பெண்கள் குறிப்பாக தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் தூங்க வேண்டும். இது அவர்களுக்கு மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

sleeping

மன அழுத்த மேலாண்மை:


தியானம், ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள் மன அமைதியை தரும். மேலும் உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள்.

மேலும் படிக்க: பிறப்புறுப்பில் அரிப்பு, எரிச்சல் பிரச்சனையா? இந்த வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்க

மருத்துவ ஆலோசனை:


உங்களுக்கு மாதவிடாய் காலத்தில் PMS அல்லது PMDD அதிகரித்தால், மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். சில நேரங்களில் மருத்துவரின் சிகிச்சை உங்களுக்கு உதவலாம்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவது இயற்கையானது தான். ஆனால் சரியான பராமரிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் இதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். உங்கள் உடல் மற்றும் மனதை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP