
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இப்பிரிவானது தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில் மத்திய பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிக வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக நான் முதல் இரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை துவங்கவுள்ளது. இப்பயிற்சிக்கான ஆயிரம் பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக வரும் ஜூலை 14ஆம் தேதி அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது ரயில்வே தேர்வுகளுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும்.
இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் விரிவான அறிக்கையை படித்து பார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 23ஆம் தேதி ஆகும்.
இந்த நுழைவு தேர்வுக்குக் கட்டணம் கிடையாது. தேர்வு எழுதும் மையம் நீங்கள் வசிக்கும் மாவட்டத்திலேயே ஒதுக்கப்படும். தேர்வு நேரம் ஒரு மணி நேரம் மட்டுமே. 100 கேள்விகளுக்கு தலா இரண்டு மதிப்பெண் என்ற அடிப்படையில் 200 மதிப்பெண் வழங்கப்படும். இரயில்வே தேர்வுக்கு 300 நபர்களுக்கும், வங்கித் தேர்வுகளுக்கு 700 நபர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவராக இருப்பது அவசியம். ஏற்கெனவே அரசுப் பணியில் இருக்கும் நபர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடாது.
"நான் முதல்வன்" - SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழ்நாடு அரசு. 1000 மாணவர்களில் நீங்களும் ஒருவராக தேர்வாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க: https://t.co/JCL2Ae2bOO#NaanMudhalvan | #governmentexams#sscpic.twitter.com/1FNAhpnXdZ
— Naan Mudhalvan - TNSDC (@naan_mudhalvan) June 8, 2024
இந்த திட்டத்தில் இதுவரை சுமார் 23 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 90437 10214, 90437 10211 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com