வாழ்நாள் முழுவதும் நமக்காகவே வாழும் அன்பு உள்ளம் அம்மாவிற்கு அன்னையர் தினத்தில் தெரிவியுங்கள். நீங்கள் அன்புடன் சொல்லும் அந்த வாழ்த்து அவர்களுடைய வாழ்க்கைகான அர்த்தத்தை உறுதி செய்யும்.
அன்னையர் தின வாழ்த்து
- அன்பின் முழு உருவாய்த் திகழ்ந்து குழந்தைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்
- அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே... அதை நீயே தருவாயே
- அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லாவற்றையும்
- ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் அம்மா எனும் வாழும் கடவுள்... இனிய அன்னையர் தின வாழ்த்துகள்
- தாயை மிஞ்சிய சக்தி இவ்வுலகில் எதுவும் இல்லை... அன்னையர் தின வாழ்த்து என்னை பெற்றெடுத்த தாய்க்கு...
- அன்னையர் போல் ஒரு தெய்வமும் இல்லை... அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரும் இல்லை... அன்னையர் தின வாழ்த்துகள்
- உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து வாழ்நாளெல்லாம் பாசத்தோடு
- அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மாவிற்கு அன்னையர் தின நல்வாழ்த்துகள்
- அன்பை பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்
- அன்பின் திருவுருவாய்... கடவுளின் மறுவடிவாய்... நம்மை அரவணைக்கும் ஆலயமாய்... என்றும் வழிகாட்டும் ஒளி விளக்காய்... எதுவும் எதிர்பாராமல் நம் நலன் ஒன்றே நாடும் அன்னையர் அனைவரையும் எந்நாளும் போற்றுவோம்... அன்னையர் தின நல்வாழ்த்துகள்
- அளவுகோள் இல்லாத அன்பு... சுயநலம் இல்லாத உள்ளம்... வெறுப்பை காட்டாத முகம்... அம்மா மட்டுமே... அன்னையர் தின வாழ்த்துகள்
- பூமி தாங்கும் முன்னே என்னை பூ போல் தாங்கிய அன்னைக்கு.... அன்னையர் தின வாழ்த்துகள்
- பெற்ற பிள்ளை இவ்வுலகில் சுடர்விட்டு ஒளிவீச தன்னை திரியாக மாற்றிக்கொள்பவளே தாய்... அன்னையை வணங்கி இமை போல் காத்திடுங்கள்.
- தாயின் அன்பையும் தாய்மையின் பெருமையை போற்றுவோம்... அன்னையர் தின நல்வாழ்த்துகள்
- உயிருக்குள் அடைகாத்து பாசத்தில் தாலாட்டி பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து எனக்காவே வாழும் அன்பு அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்து
- விடுமுறையே இன்றி வாழும் வரை குடும்பத்திற்காக உழைக்கும் அன்னைக்கு அன்னையர் தின நல்வாழ்த்துகள்
- தாய்மார்களின் அளவிட முடியாத அன்பாலும், அசைத்திட முடியாத மன வலிமையாலும் இவ்வுலகம் இயங்குகிறது... அன்னையர் நாள் நல்வாழ்த்துகள்
- இனிய அன்னையர் தின வாழ்த்துகள்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation