Christmas Wishes 2024 : அன்பை விதைத்த இயேசு பிரானின் பிறப்பை கொண்டாடும் உள்ளங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

கிறிஸ்துமஸ் நன்நாளில் நண்பர்கள், அன்புக்குரியவர்களுடன் பகிர வேண்டிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில் பகிரப்பட்டுள்ளது. இயேசுபிரான் போதித்த நற்பண்புகளை கிறிஸ்துவ சொந்தங்களுக்கு வாழ்த்தின் மூலம் நினைவுகூர்வோம்.
image

உலகளவில் பெரும்பாலான மக்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டது. இந்த நாள் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை குறிக்கிறது. கிறிஸ்தவர்களின் வீடுகளில் மரம் வைத்து, ஸ்டார் தொங்கவிட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரித்து இயேசுவின் பிறப்பை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாட ஆவலோடு காத்திருப்பர். கிறிஸ்துமஸ் சீசன் கொண்டாட்டம் கதைகள், பாடல்கள், பாரம்பரிய விஷயங்களால் கடத்தப்பட்டுள்ளது. இந்த நன்நாளில் உங்கள் நண்பர்கள், குடும்ப உறவுகள், அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து மகிழ வேண்டிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் இங்கே...

christmas wishes greetings

கிறிஸ்துமஸ் வாழ்த்து 2024

அன்பு, கருணை, அமைதி, தியாகம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாய் விளங்கிடும் கிறிஸ்துமஸ் நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைத்திருக்க இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

இந்த திருநாளில் உங்கள் வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

அனைவரது வாழ்விலும் இயேசுபிரான் போதித்த அமைதியும், சமாதானமும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலவிட ஆண்டவரை பிரார்த்திப்போம்... மகிழ்ச்சி நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

மண்ணில் பிறந்த இறை பாலகன் உங்களை வெற்றியை நோக்கி வழி நடத்துவாராக... கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

மனிதம் மலர... மானிடர் போற்ற... வாழ்ந்த இறைமகன் இயேசு பிரான் பிறந்த இந்த தினத்தில் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

கிறிஸ்துவ சகோதர சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

மானுடத்துக்கு இரத்தம் சிந்திய மானுடன் பிறந்த நாள்! இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசுபிரான் பிறந்த தினம் இன்று... நாமும் அன்பை விதைப்போம்... அன்பாம் உலகை ஆழ்வோம்... இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய இயேசு கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இயேசு கிறிஸ்துவின் அன்பு, இரக்கம், தியாகம் மற்றும் தொண்டுகளை இந்த நன்னாளில் நினைவுகூர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்

நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய புனிதர் இயேசுநாதரின் பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடுவோம். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டி அரவணைத்து காக்கும் உயரிய பண்பினை மனித சமுதாயத்துக்கு உணர்த்திய ஏசுபிரானை இந்நாளில் போற்றி வணங்குவோம்.

உயர்ந்த பண்புகளை விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்துவர்கள் வாழ்வில் வளமும், நலமும் பெருகிட மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவர்களுக்கு இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

இயேசு கிறிஸ்து போதித்த அன்பு, எளிமை மற்றும் இரக்கத்தை நாமும் பின்பற்றுவோம். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

இயேசு பாலகனின் பிறப்பை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP