தளராத உழைப்பால் நாட்டை உயர்த்துவோருக்கு உழைப்பாளர் தின வாழ்த்துகள்

உலகை அடுத்தக்கட்டத்திற்கு இயக்கி கொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு மே தினத்தில் உழைப்பாளர் தின வாழ்த்துகளை பகிருங்கள்.
labour day messages

labour day 2025

உழைப்பாளர் தின வாழ்த்து

  • உழைப்போம்... உயர்வோம்... இலக்கை அடைவோம்... உழைப்பாளர் தின வாழ்த்துகள்
  • உழைப்பே உயர்வு தரும்!! உழைப்பின்றி உயர்வில்லை!! உழைப்பவரே உயர்ந்தவர்!! தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்
  • வீட்டை உயர்த்திட நாட்டை வளர்த்திட… நாளை உருவாக இன்று உழைத்திடும் உன்னதக் கரங்களே தொழிலாளர் தின வாழ்த்துகள்
  • கல்லுடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை அனைவரும் உழைப்பாளிகளே… நாட்டின் முன்னேற்றத்திற்காக எதேனும் ஒரு வகையில் உழைத்து கொண்டிருக்கும் அத்தனை உழைப்பாளிகளுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்
  • முயன்றால் முடியாதது இல்லை… முயற்சிப்போம் முடிவுக்கால அல்ல நம் முன்னேற்றத்திற்காக... உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்
  • உடலை இயந்திரமாக்கி... உழைப்பினை உரமாக்கி... உலகத்தை இயங்க வைக்கும் உன்னத தோழனே... இது உனக்கான நாள் உழைப்பாளர் தின வாழ்த்துகள்
  • செங்குருதியை வியர்வையாக்கி உழைப்பையே மூச்சாக சுவாசித்து தேசத்தின் பொருளாதாரத்தை தூக்கி பிடிக்கும் தொழிளார்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள்
  • உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே தினத்தில், நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்
  • உழைப்பே உயர்வு தரும், மன நிறைவு தரும், ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன், தளர்வறியா உழைப்பின் மூலம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகள்
  • தொழில் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் தொடர்ந்து பாடுபடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்.
  • தளராத உழைப்பால் தமிழகத்தை உயர்த்தி வரும் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள்
  • உழைப்பவர்களே உயர்ந்தவர்கள் உழைப்பால் உயரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின நல்வாழ்த்துகள்
  • உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
  • வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்... நாளை உலகை இனிதே ஆளட்டும்... உழைப்பாளர் தின வாழ்த்துகள்
  • உடலை இயந்திரமாக்கி மனதை மரமாக்கி வியர்வை துளியை ரணமாக்கி கவலைகளை மறந்து தன் குடும்பத்திற்காகவும் நாட்டிற்காகவும் உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்
  • உழைக்கும் வர்கத்திற்கு கர்வம் உண்டு! உழைப்பாலே உயர்ந்தோர் பலர் உண்டு! உலகம் உழைப்பாளர்களை போற்றட்டும்! உழைப்பின் பயனை முழுதாய் காணட்டும்! தொழிலாளர் தின வாழ்த்துகள்
  • இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள்!

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP