Independence day wishes :  தேசம் மீது நேசம் கொண்ட சக இந்தியனுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

நாட்டின் 78வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சக இந்தியனுக்கு அனுப்ப வேண்டிய சுதந்திர தின வாழ்த்து, கவிதை, குறுஞ்செய்தி உள்ளிட்ட அனைத்தும் இங்கு பகிரப்பட்டுள்ளது.

independence day quotes

நம் தேசத்தின் 78வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடுப்படுகிறது. கொடுங்கோல் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து இந்தியாவுக்கு விடுதலையடைந்ததை இந்த நாள் குறிக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தில் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றிப் புகழ்வோம். சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசப் பற்றாளர்களுக்கும், ஒவ்வொரு சக இந்தியனுக்கும் பகிர வேண்டிய வாழ்த்து மற்றும் கவிதைகள் இங்கே...

Independence Day

  1. பாரத தேசத்தின் மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  2. தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!
  3. நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க பல இன்னல்களை தாங்கி சிறைகாற்றை சுவாதித்து உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம். சுதந்திர தின வாழ்த்துகள்!
  4. பாசத்திற்குரிய இந்திய சொந்தங்களே என இதயம் நிறைந்த சுதந்திர தின வாழ்த்துகள்!
  5. என் தேசத்தின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
  6. வீரமங்கை வேலுநாச்சியார் தொடங்கி கல்விக்கண் திறந்த அய்யா காமராசர் வரை இந்திய மண்ணின் விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த அத்தனை சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் வீர வணக்கம். சுதந்திர தின வாழ்த்துகள்!
  7. பாரத நாட்டில் வாழும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!
  8. சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து இந்தியன் என்ற ஒற்றைச் சொல்லால் இணையும் பாரத நாட்டின் சொந்தங்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  9. நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளை போற்றி வளமான வல்லரசு பலமான நல்லரசு என்ற இந்தியாவை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்... இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  10. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு சமூக நல்லிணக்கத்தோடு இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைப்போம்... 78வது சுதந்திர தின வாழ்த்துகள்!
  11. வளமான இந்தியாவை உருவாக்க இந்த விடுதலை நாளில் நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்போம்... சுதந்திர தின வாழ்த்துகள்!
  12. வருங்கால இந்திய வளமானதாக வலிமையானதாக அமைய ஒவ்வொரு
  13. இந்தியனும் ஆயுத்தப் பணிகளை தொடங்குவோம்... சுதந்திர தின வாழ்த்துகள்
  14. நாட்டுப்பற்றுக்கு கிடைத்த மகத்தான வெற்றியே சுதந்திரம்! போற்றி பேணிகாப்போம்... இனிய 78வது சுதந்திர தின வாழ்த்துகள்
  15. முன்னூறு வருட அடிமைத்தனத்திற்கு முழுக்குப்போட்ட நாள் இன்று... இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
  16. பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா! வாள்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா! இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
  17. போராடிப் பெற்ற சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்வோம்! பாரத நாட்டின் உறவுகளுக்கு சுதந்திர தின வாழ்த்துகள்...
  18. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுந்ததிர காற்றை சுவாசிக்க செய்த அனைத்து தியாகிகளுக்கும் எங்கள் வீர வணக்கம்! இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP