கோடை விடுமுறை வந்தாலே, ஐய்யோ! 45 நாள் என்ன செய்ய போகிறோம்? எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்ற கேள்விகளோடு ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் அச்சம் உண்டாகும். இதைப் போக்கவும், இந்த கோடை விடுமுறையில் உபயோகமாகவும், மகிழ்ச்சியுடனும் உங்களது குழந்தைகளை வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த டிப்ஸ்களைக் கொஞ்சம் பயன்படுத்திப் பாருங்கள்.
மேலும் படிக்க: மன ஆரோக்கியமும் உற்சாகமும் பெற நீங்கள் செய்ய வேண்டியது?
கோடை விடுமுறையில் குழந்தைகளுக்காக விஷயங்கள்
வாசிப்பை ஊக்குவித்தல்:
விடுமுறை வந்தாலே புத்தகத்தைக் கையில் எடுக்க மாட்டார்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு பள்ளிக்குச் செல்லும் போது படித்த விஷயங்கள் கூட மறந்து விடும். எனவே கோடை விடுமுறை குழந்தைகளுக்கு ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்ய வேண்டும் என்று நினைத்தால் புத்தகங்களை வாசிக்கவும். இந்த நடைமுறை உங்களது குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் போது வாசிப்புத் திறன் அதிகமாவதோடு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வார்கள். எனவே குழந்தைகளுக்கு அவர்கள் ரசிக்கும் படியான புத்தகங்களைப் படிப்பதற்கு ஊக்குவிக்கவும்.
அருங்காட்சியத்தைப் பார்வையிடல்:
கோவில்களுக்கு அடிக்கடி குழந்தைகளை அழைத்துச் செல்வதற்குப் பதிலாக அருகில் உள்ள அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லவும். அறிவியல் அருங்காட்சியகம், கலை அருங்காட்சியகம், தொல் பொருள் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லும் போது பராம்பரியமான விஷயங்களை அவர்ள் ஆர்வத்துடன் அறிந்துக் கொள்வார்கள். மேலும் புதிய விஷயங்களைப் பார்க்கும் போது குழந்தைகளின் கேள்வி ஞானமும் அதிகரிக்கும்.
இயற்கையுடன் பயணித்தல்:
குழந்தைகளுடன் நடைபயணம் செய்வது இயற்கையுடன் இணைவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். இயற்கையான சூழல், நல்ல காற்று அனைத்தும் உங்களது மனதை இதமாக்குவதோடு, கோடை வெப்பத்திலிருந்து கொஞ்சம் தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.
மரம் நடுதல்:
கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு தோட்டக்கலையில் ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சிக்கவும். வீடுகளில் உள்ள தோட்டங்களைப் பராமரிப்பதோடு சிறு சிறு செடிகளை வளர்க்கச் சொல்லுங்கள். பசுமையான சூழலில் இருப்பது உங்களது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். மரங்களை நடுவதற்கு உங்களது குழந்தைகளை அவர்களது நண்பர்களுடன் அழைத்துச் செல்லும் போது என்ஜாய் பண்ணி அவர்களது பணிகளை மேற்கொள்வார்கள்..
சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லுதல்:
கோடை விடுமுறையில் சில நாட்கள் வீடுகளில் இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது அருகில் உள்ள இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லுங்கள். அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, மாமா, அத்தை போன்ற அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சுற்றுலாவிற்கு செல்லும் போது மனதளவில் பெரும் மகிழ்ச்சி ஏற்படும்.
மேலும் படிக்க: அம்மாக்களை மட்டும் ஏன் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள் தெரியுமா?
டைரி எழுதுதல்:
பள்ளிக்குச் செல்லும் போது பாடங்களைப் படிப்பதற்கே நேரம் கிடைக்காது. இந்நேரத்தில் டைரி எழுத சொல்லுவது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். விடுமுறை நாட்கள் என்றால் நேரம் அதிகம் கிடைக்கும். இந்நேரத்தில் நாள் முழுவதும் என்ன நடந்தது? என்பது குறித்து எழுத சொல்லுங்கள். இதன் மூலம் அவர்களின் எழுத்துத்திறன் மேம்படும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation