herzindagi
image

குழந்தை இடைவிடாமல் அழுவதற்கு காரணம் தெரியுமா ? அழுகையை கட்டுப்படுத்த வழிகள்

வீட்டில் இடைவிடாது குழந்தை அழுதுகொண்டே இருந்தால் எந்த தாயும் வருத்தப்படுவாள். பல நேரங்களில் குழந்தை ஏன் ஏதற்காக அழுகிறது என்ற காரணத்தை கண்டுபிடிக்க முடியாது. குழந்தை அழுது கொண்டே இருப்பதற்கு ஆங்கிலத்தில் COLIC என பெயர். குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்துவது எப்படி என இந்த பதிவில் பார்ப்போம்.
Editorial
Updated:- 2025-07-12, 14:34 IST

குழந்தை அழுவது இயற்கையான விஷயம் என்றாலும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தால் எப்படி நிறுத்துவது என தாய்க்கும் பதில் தெரியாது. சாப்பிட்ட உணவின் காரணமாக குழந்தை அழுவதாக தாயை குறை சொல்வார்கள். எந்த குழந்தையும் பேசத் தொடங்கும் முன்பாக தனக்கு தேவையானதை அழுகையின் மூலம் வெளிப்படுத்தும். அதுவே குழந்தை பேச தொடங்கிவிட்டால் அல்லது நடக்க பழகினால் சைகையின் மூலம் தேவையானதை காண்பிக்கும். குழந்தைக்கு அழுகை என்பது ஒரு விதமான உரையாடல் ஆகும். ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தை எதற்கெடுத்தாலும் அழுக செய்யும். அதுவும் குறிப்பாக மாலை நேரத்தில் அழுது கொண்டே இருக்கும். குழந்தை தொடர்ந்து அழுவதற்கான காரணம் மற்றும் அழுகையை கட்டுப்படுத்துவது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

calm a colic baby

குழந்தை இடைவிடாமல் அழுக காரணம்

பொதுவாக குழந்தை பசி எடுத்தால் அழும், தூக்கம் வந்தால் அழும், சிறுநீர் அல்லது மலம் கழித்து தனது துணி ஈரமாகிவிட்டால் அழும், கொசு கடித்தால் அழும், தன்னை சுற்றி விளையாட ஆள் இல்லையெனில் அழும், பால் குடித்த பிறகு ஏப்பம் விடாமல் வயிறு அடைத்திருந்தால் அழும், உடலில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அழும். குழந்தை அழுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இவை எதுவும் இல்லாமல் குழந்தை அழுது கொண்டே இருந்தால் அதற்கு PURPLE CRY என்று பெயர். குழந்தை ஏன், ஏதற்காக மாலை அல்லது இரவு நேரத்தில் அழுகிறது என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை.

குழந்தையின் அழுகையை நிறுத்த

பிறந்த முதல் மாதத்தில் இருந்து மூன்று, நான்கு மாதங்கள் வரை குழந்தை மேற்கண்டபடி அழ கூடும். தினமும் மூன்று மணி நேரம், வாரத்திற்கு மூன்று நாட்கள், மாதத்திற்கு மூன்று வாரங்கள் அழுவது பேபி COLIC ஆகும். குழந்தை அழும் நேரத்தை கவனித்து கொள்ளவும்.

குழந்தையை குளிக்க வைப்பது

குழந்தை அழும் நேரத்தை கண்டுபிடித்துவிட்டால் அதற்கு முன்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பாட்டி, பாலூட்டி தூங்க வைக்க முயற்சிக்கவும். குழந்தை பால் குடித்துவிட்டு தூங்கிவிட்டால் அழுவதற்கான வாய்ப்பு குறைவே.

குழந்தையை துணியில் சுற்றுவது

குழந்தையை துணியில் நன்கு சுற்றி வைக்கும் போது தாயின் கருப்பையில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கும். இதனால் குழந்தை செளகரியமாக உணர்ந்து அழாது அல்லது அழுகையை நிறுத்திவிடும்.

கருவறை ஒலி

குழந்தைக்கு தாயின் கருவறையில் ஒரு விதமான சத்தம் கேட்டு கொண்டே இருக்கும். இதற்கு WHITE NOISE என்று பெயர். அதாவது சிலருக்கு மின் விசிறி ஓடும் சத்தம் கேட்டாலே தூக்கம் வந்துவிடும். குழந்தைக்கு WHITE NOISE ஒலிக்க செய்யவும்.

தோளில் போட்டு தூங்க வைப்பது

குழந்தை அழத் தொடங்கினால் தோளில் போட்டு தட்டிக் கொடுத்து தூங்க வைக்க முயற்சிக்கவும். குழந்தை தூங்காமல் அழுதால் காது அருகே உஷ் உஷ் என சத்தம் எழுப்பவும். இது குழந்தையை தூங்க வைக்க உதவும். சிலர் குழந்தையின் பேசிஃபயர் வைக்கின்றனர். அது சில நேரங்களில் உதவுவது இல்லை.

குழந்தைக்கு மசாஜ்

குழந்தை அழ தொடங்கும் நேரத்தில் முதுகில் மசாஜ் செய்யவும். இந்த செளகரியமான உணர்வு குழந்தையின் அழுகையை நிறுத்தி தூங்க வைக்கும்.

குழந்தையை ரோலரில் போட்டு வெளியே அழைத்து செல்லலாம். மாலை நேரத்தில் குழந்தையை வெளியே கொண்டு செல்ல தயங்கினால் மார்புடன் அனைத்தவாறு பேபி கேரியர் பயன்படுத்தவும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com