காதலும் ஒரு உறவின் தொடக்கமும் அழகமான பயணமாகும். சில நேரங்களில் அந்த பயணம் நமக்கு அசெளகரியமாகவும், கவலை அளிப்பதாகவும் அமையலாம். அப்படியான சூழ்நிலை உங்களுடைய வருங்கால துணை திருமணத்திற்கு முன் செக்ஸ் செய்ய ஆசைப்படுவது அல்லது கட்டாயப்படுத்துவதால் ஏற்படும். இது அசெகரியத்தை உண்டாக்குவதுடன் உறவில் ஒரு அபாய சிக்னலையும் ஒலிக்கிறது. மகிழ்ச்சிகரமான உறவில் பரஸ்பரம், மரியாதை மற்றும் புரிதல் அவசியமாகும். இந்த மூன்றில் ஏதாவது ஒன்று இல்லையென்றாலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். இது மாதிரியான பிரச்னையை நீங்கள் சந்தித்து மன அழுத்தத்தில் இருந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கு சில வழிகளை வல்லுநர்களின் ஆலோசனைப்படி இங்கு பகிர்ந்துள்ளோம்.
உங்களுடைய வருங்கால துணையிடம் திருமணத்திற்கு முன் செக்ஸ் செய்ய நினைப்பது அசெகளரியத்தை ஏற்படுத்துவதாகவும் அதற்கு தயாராக இல்லை என்பதையும் தெளிவாக எடுத்துரைக்கவும். இந்த விஷயத்தில் உங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதை உணர்த்துங்கள். துணையிடம் சொல்லி புரிய வைத்து உங்களுடைய எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவும், குறிப்பிட்ட வரையறைக்குள் தொடர விரும்புவதாகவும் தெரிவியுங்கள்.
உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்திய பிறகு உறவில் எல்லைகளை வகுத்துவிடுங்கள். வருங்கால துணை அழுத்தம் கொடுப்பதை அல்லது உணர்ச்சிகரமான மிரட்டல் விடுப்பதை ஏற்காதீர்கள். முடியாது, வேண்டாம் என சொல்வதற்கு தயங்காதீர்கள். உங்களுடைய முடிவில் திடமாக இருங்கள். மேலும் வருங்கால துணை எதற்காக இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுவதையும், அழுத்தம் கொடுப்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
திருமணத்திற்கு முன் செக்ஸ் விஷயத்தில் வெளிப்படையாகவும், நேர்மையான பேச்சையும் முன்னெடுங்கள். உங்களுடைய துணை சொல்ல நினைப்பதையும், வெளிப்படுத்த நினைப்பதையும் கவனிக்கவும். மகிழ்ச்சிகரமான உறவிற்கு உரையாடல் மிக அவசியமாகும்.
ஒரு உறவில் உங்களுடைய மதிப்பும், நம்பிக்கையும் எக்காரணத்திற்காகவும் குறையக் கூடாது. யார் அழுத்தம் கொடுத்தாலும் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்காதீர்கள். வருங்கால துணை உங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நபராக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் சிரமமாக உணர்ந்தால் உடனடியாக நம்பத்தகுந்த நண்பரிடம் அல்லது குடும்ப உறுப்பினரிடம் பேசவும். அவர்கள் உங்களுக்கு தகுந்த ஆலோசனையை அளிப்பார்கள்.
வருங்கால துணை உங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தவறி தொடர்ந்து வற்புறுத்தினால் நீங்கள் அந்த உறவை தொடரை வேண்டுமா என்ற முடிவை எடுக்க வேண்டும். உங்களுக்கு மதிப்பு அளிக்காத உறவு நீண்ட நாட்களுக்கு தொடர முடியாது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். உறவில் நீங்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தால் துணையால் துன்புறுத்தப்பட்டால் அதிலிருந்து வெளிவருவதே சிறப்பான முடிவாகும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com