Friendship Day Wishes & Quotes 2024: தோள் கொடுக்கும் நண்பனுக்கு இனிய நட்பு தின வாழ்த்துக்கள்!

Friendship Day Wishes in Tamil: நண்பர்கள் தினத்தில் நண்பர்களுக்கு அனுப்ப வித விதமான வாழ்த்து பதிவுகள், கவிதைகள் இந்த கட்டுரையில்...

friendship day messages

சர்வதேச நண்பர்கள் தினம் ஆகஸ்ட் 4ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் நம் வாழ்க்கையில் எப்போதும் உறுதுணையாக இருக்கும் நண்பர்களை கொண்டாட அற்புதமான தருணம் இது. சமூக வலைதலங்கள் நண்பர்களுக்கு பகிர வேண்டிய வாழ்த்து, கவிதை, குறுஞ்செய்திகள் ஆகியவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்...

happy friendship day

இனிய நட்பு தின வாழ்த்துக்கள் (Friendship Day Wishes in Tamil)

  • அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அன்பு... அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றுவது நட்பு...
  • சில நேரங்களில் உறவுகள் கூட விலகிவிடலாம்... ஆனால் உண்மையான நட்பு எப்போதும் விலகாது
  • நல்ல நண்பர்கள் எளிதில் கிடைப்பதில்லை... அப்படி கிடைத்தால் அந்த நண்பர்கள் எதையும் எதிர்பார்பதில்லை
  • காதல் என்பது கரம் கோர்த்து போகும் வரை... நட்பு என்பது உயிர் பிரியும் வரை
  • நட்புக்கு பாலினம் தேவையில்லை... பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் உன்னதமான உறவே நட்பு!
  • நட்பு என்பது வானில் இருக்கும் நட்சத்திரத்தை போல... வானம் இருக்கும் வரை நட்பும் நீடிக்கும்
  • ஒரு நல்ல நூலகம் பத்து நண்பனுக்கு சமம்... ஒரு சிறந்த நண்பன் நூறு நூலகத்திற்கு சமம்... இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்
  • நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு...
  • வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கு இல்லையே... இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்
  • நட்பு என்பது இதயத்தை போல... எனக்கே தெரியாமல் எனக்காக துடிக்கும் உன்னைப்போல... நண்பர்கள் தின வாழ்த்துகள்

இனிய நட்பு தின மேற்கோள்கள் (Friendship Day Quotes in Tamil)

  • ஆபத்தில் உதவுபவன் மட்டும் நண்பன் அல்ல! ஆபத்து என்று தெரிந்தும் இறுதிவரை உதபுவனே நண்பன்!
  • சோகமான நேரம் கூட சுகமாக மாறிப்போகும் வலிகள் கூட தொலைந்து போகும் நண்பர்களுடன் இருந்தால்... நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்
  • பேசாமல் இருந்தாலும் பாசம் குறையாது நம் நட்பு... தொலைவின் இருந்தாலும் தொடரட்டும் நம் நட்பு... அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்
  • தோள் கொடுக்க தோழன் இருந்தால் வாழ்வில் சோதனையை கூட சாதனையாக மாற்றலாம்
  • என் வாழ்க்கையில் என்னோடு எந்த எதிர்பார்ப்பும் இன்றி பழகும் உனக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்
  • விட்டு கொடுப்பது மட்டும் நட்பல்ல... கடைசி வரை விட்டு விலகாமல் இருப்பதே உண்மையான நட்பு
  • தடுமாறும் போது தாங்கி பிடிப்பவனும் தடம் மாறும் போது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்
  • வீழ்ந்தவன் மீண்டு எழ ஒரு நொடி போதும் ஊக்குவிக்க உண்மையான நண்பன் இருந்தால்
  • ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும். ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்... நல்ல நண்பன்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். முகநூலில் பின்தொடர்வதற்கு HER ZINDAGI கிளிக் செய்யவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP