வாழ்க்கையின் பாதியில் நம்முடன் கைகோர்த்தாலும் இறுதி மூச்சு வரை நம்மை பேரன்பு கொண்டு நேசிக்கும் நமக்காகவே வாழும் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தவறினால் அது பெரும் குற்றமாக மாறிவிடும். ஆணின் வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்கும் வாழ்க்கை துணை எனும் மனைவிக்கு பிறந்தநாள் அன்று தெரிவிக்க வேண்டிய வாழ்த்து மற்றும் கவிதை இங்கு பகிரப்பட்டுள்ளது.
மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து
- வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் துணை நின்று என்னை உயர்த்திய அன்பு மனைவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
- அன்பின் தாயாக பண்பின் தந்தையாக திகழும் உளங்கனிந்த மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
- தவமின்றி கிடைத்தவள் நீ.... தேடுதல் இன்றி வந்த வரம் நீ... என் வாழ்க்கையின் பெரும் பொக்கிஷம் நீ... என் இனியவளே பிறந்தநாள் வாழ்த்துகள்
- உயிர் உள்ளவரை உன்னை தொடர்ந்து நேசிப்பேன்... பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே...
- உலகின் ஏழு அதிசயங்களை கண்டதில்லை ஒருபோதும்... எனினும் கவலைப்பட்டதில்லை ஏழு அதிசயங்களின் மறு உருவமான நீ என்னுடன் கைகோர்த்து நடப்பதால்... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
- வாழ்க்கையில் துன்பமோ இன்பமோ எது நேர்ந்தாலும் என்றும் என்னை விட்டு நீங்காத உயிரிலும் மேலான அன்பு மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
- என் வாழ்வை முழுமையாக்கிய அன்பு மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
- வாழ்க்கைக்கு அழகு சேர்த்த இனியவளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
- வாழ்வின் சுக துக்கங்களில் பங்கெடுத்து என்னை குழந்தை போல் பாவித்து அன்புடன் அரவணைக்கு என்னவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
- உன் சந்தோஷத்தை விட என் சந்தோஷத்திற்கு முக்கியம் தந்த அன்பு மனைவிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
- என் மீது தவறு இருந்தும் வாழ்க்கை முழுவதும் பிறரிடம் விட்டுக் கொடுக்காமல் பேசும் இனியவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
- அணுஅணுவாய் அனுதினமும் என்னுள் ஆட்சி செய்பவளே.... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே
- என் வாழ்க்கையை அர்த்தமாக்கிய மனைவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
- எனக்காகவே வாழும் ஒரு உயிர்... என்னுடைய வெற்றிக்காக உழைக்கும் ஒரு உயிர்...
- உன்னாலே நான்... உனக்காகவே நான்... அன்பை காணாத என் வாழ்வில் வந்த வானவில் நீயடி... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
- இறைவனாய் தந்த இறைவியே... உயிர் வரை உந்தன் மடியிலே... துயரிலும் என்னை தாங்கும் மனைவிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்
- கவலையின் போது கட்டி அணைத்து கண்ணீர் துடைத்து துயர் நீக்கும் என் இனியவளுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.