
இன்றைக்கு பெண்கள் ஆண்களை விட அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இருந்தாலும் அவர்களுக்கு குடும்ப சூழல், பொறுப்பு உள்ளிட்ட பல காரணங்களால் அவர்களால் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை. என்ன தான் பட்டப்படிப்பு படித்தாலும் திருமணத்திற்குப் பிறகு பெண்களின் வாழ்க்கை முற்றிலும் தலைகீழாக மாறிவிடும். 60 சதவீத பெண்கள் மட்டுமே திருமண வாழ்க்கைக்குப் பின்னதாக தங்களுக்கு பிடித்த பணியில் தொடர்கின்றனர்.
இந்த பெண்களில் ஒரு சிலர் மட்டுமே உயர் அதிகாரத்திற்கு செல்கின்றனர். ஏன் அவர்களால் பணியிடத்தில் வெற்றி பெற முடியவில்லை? என்ன செய்தால் சாதிக்கலாம்? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: தாய்ப்பால் அதிகரிக்க இந்த வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுங்க!
எந்த அலுவலகத்தில் பணியாற்றினாலும் வேலைகளை செம்மனே செய்யக்கூடிய திறமை பெண்களுக்கு உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு பல நிறுவனங்கள் உங்களால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லி சொல்லியே அடுத்த கட்டத்திற்கு செல்ல விடமாட்டார்கள். எனவே உங்களின் திறமைக்கான ஊதியம் எங்கு அதிகம் கிடைக்கிறதோ? அங்கு சென்று உங்களின் திறமையைக் காட்டினால் போதும். பணியில் வெற்றியைப் பெற முடியும்.
அலுவலகத்தில் பணியாற்றும் சில பெண்கள், எந்தவொரு இக்கட்டான சூழலையும் எதிர்கொள்ள முடியாமல் திணறுவார்கள். குடும்பத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் மற்றவர்கள் முன்னிலையில் பேசும் போது சில இடங்களில் சிக்கிக்கொள்வீர்கள். இது உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையும். எனவே யாரிடம் பேசினாலும் கொஞ்சம் திமிருடனும் கவனமாக பேச வேண்டும்.
புதிதாக பணிக்கு வந்தாலும், பல ஆண்டுகளாக பணியில் இருந்தாலும் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வது, யார் ஏதேனும் சொல்லி விட்டால் அலுவலகத்திலேயே அழுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையைப் பாதிக்கும். நம்பி எந்தவொரு பணியையும் உங்களிடம் கொடுக்க மாட்டார்கள் என்பதால் முதலில் அழுகை மற்றும் கோபத்தை நிறுத்த வேண்டும்.
எந்தவொரு சூழ்நிலை வந்தாலும் பயந்து ஓடாமல், தைரியமாக செயல்படுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், தைரியமாக நீங்கள் செய்து பழகுங்கள். என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
குடும்ப சூழல், குழந்தைகளைப் பார்க்கும் பொறுப்பு என எது இருந்தாலும் பணிக்கு வரக்கூடிய நேரத்தை ஒருபோதும் மாற்றக்கூடாது. சரியான நேரத்திற்குப் பணியைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடக்கொண்டே இருக்க வேண்டும். நேர மேலாண்மைய முறையாக பின்பற்றுங்கள். வெற்றி நிச்சயம் உங்களது கையில் வந்து சேரும்.
மேலும் படிக்க: உங்களது குழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டிய சாலை பாதுகாப்பு விதிகள் இது தான்!

இது போன்ற முறைகளோடு புதிய புதிய தொழில்நுட்ப அப்டேட்டுகளை அறிந்துக் கொள்ளுதல், அலுவலகத்தில் மற்றவர்களுடன் தைரியமாக பேசி பணியிட சூழலை பிரச்சனையின்றி அமைத்துக் கொள்ளுதல் மற்றும் உங்களுக்காக வேலையை மட்டும் சரியாக செய்தல் போன்ற பல்வேறு பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலே பணியிடத்தில் வெற்றி வாகை சூட முடியும்.
Image source- Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com