உலகில் எந்த பாசத்திற்கும் தடை போட்டு விடமுடியும். ஆனால் பெற்றோர்கள் பாசத்திற்கும், உடன் பிறந்தவர்களின் பாசத்திற்கும் எந்த தடையும் போட முடியாது. சிறு சிறு சண்டைகள் வந்தாலும் அத்தனையும் ஒரு புன்னகையில் மறந்துவிடும் அளவிற்கு உயர்ந்த பாசம். அதுவும் உடன் பிறந்த சகோதராக இருக்கட்டும், சகோதரியாக இருக்கட்டும், இவர்களின் பாசத்தை யாராலும் கணக்கிட முடியாது. இந்த பாசத்தைக்கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆவணி மாதமும் பௌணர்மி நாளில் ரக்ஷா பந்தன் எனப்படும் சகோதரத்துவத்தை உயர்ந்தும் விழா கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் இந்த நாளை பொதுவிடுமுறையாகவும் அந்தெந்த மாநில அரசுகள் அறிவிக்கிறது. அதன் படி இந்தாண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் சகோதர்கள் சகோதரிகளுக்கும், சகோதரிகள் சகோதர்களுக்கும் அவர்களுக்குப் பிடித்த பரிசுகளைக் கொடுத்தும், கையில் ராக்கியும் கட்டிவிடுகின்றனர். மேலும் சகோதரர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல், வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக ரக்சா பந்தன் நாளில் வழிபாடுகளையும் மேற்கொள்வார்கள். இப்படி சகோதரத்துவத்தைப் போற்றும் நாளைக் கொண்டாட உற்சாகமாக இருக்கும் அதே வேளையில், வாழ்த்துக்களையும் சோசியல் மீடியாக்களின் வாயிலாக கட்டாயம் பரிமாறிக் கொள்வோம். இதோ உங்களுடன் பிறந்தவர்களுக்கு ரக்ஷா பந்தன் நாளில் வாழ்த்துச் செய்திகளை அனுப்ப சில யோசனைகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம்.
சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்:
- உடன்பிறந்தவர்களுக்கு இடையிலான பிணைப்பை கௌரப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
- வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், உன்னால் முடியும் கடந்து செல் என ஒற்றை வார்த்தையால் ஊக்கம் அளித்த சகோதரிக்கு இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!
- உடன்பிறந்தவர்கள் இல்லையென்றாலும் சகோதர உணர்வுடன் என் வாழ்க்கையில் பயணிக்கும் அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் சகோதரரே/ சகோதரியே!,..
- அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள். வாழ்க்கை சிறப்பாக அமைய கடவுளை பிராதிக்கிறோம்.
- ஆயிரம் சண்டைகள் இட்டுக் கொண்டாலும் எப்போதும் சகோதரர் என்ற உணர்வை யாராலும் அளிக்கவே முடியாது. அனைவருக்கும் இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.
- என் வாழ்க்கையில் பாதி தோழியாகவும், பாதி தாயாகவும் இருக்கும் என் இனிய உடன்பிறப்புக்கு வாழ்த்துக்கள்.
- அண்ணன் தங்கை பாசத்தைப் பணம் கொடுத்து வாங்க முடியாது. இதற்கு எல்லையும் இல்லை. நி என் வாழ்வில் சகோதரியாக கிடைத்தமைக்கு மிக்க நன்றிகள். ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.
- அப்பாவாக என்னை அரவணைத்துச் செல்லும் அனைவருக்கும் என் உடன்பிறந்த சகோதரனுக்கு வாழ்த்துக்கள் பல..
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation