
சிலந்தியை விரட்ட என்ன செய்வது: எல்லோருடைய வீட்டு சுவற்றிலும் சிலந்தி நிச்சயம் இருக்கும். சிலந்திகள் வீடு முழுவதும் வலையை உருவாக்கி, நம் வீட்டையே நாசம் செய்துவிடுகிறது. இது போன்ற பிரச்சனை உங்கள் வீட்டிலும் இருந்தால், நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த வீட்டு வைத்தியத்தை செய்வதற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இதனை பயன்படுத்துவதன் மூலம் நொடிப்பொழுதில் தீர்வு காணலாம். அதற்கு நமக்கு தேவையானது வினிகர் மட்டுமே. ஒரு கப் தண்ணீரில் 3 முதல் 4 டீஸ்பூன் வினிகரை ஊற்றிக்கொள்ளவும். இதனை ஒரு ஸ்பிரே பாட்டிலுக்கு மாற்றிக்கொள்ளவும். சிலந்தி உள்ள இடங்களில் தெளித்தால் போதும், அது விலகி ஓடும்.

வினிகர் போன்று பூண்டினையும் பயன்படுத்த, சிலந்தி தொல்லை நீங்கும். முதலில் பூண்டை அரைத்துக்கொள்ளவும். இதனோடு தண்ணீரை கலந்துக்கொள்ளவும். சிலந்தி உள்ள இடங்களில் ஸ்பிரே செய்யவும். சில நாட்களுக்கு இவ்வாறு செய்து வாருங்கள், அந்த இடத்திற்கு சிலந்தி வரவே வராது. ஏனெனில், பூண்டு வாடை, சிலந்திக்கு பிடிப்பதில்லை.
எறும்பு தொல்லை வீட்டில் இருந்தால் பெர்பியூம் பயன்படுத்துவதை பார்த்திருப்போம். பெர்பியூம் பயன்படுத்துவதால் எறும்பினை போலவே, சிலந்திகளும் பயந்தோடும்.

சுவற்றில் தெறிப்புகள் இருந்தால் சிலந்தி வர அதிக வாய்ப்புள்ளது. அதனால், வீட்டில் உள்ள சுவற்றை சரி பார்த்து, தெறிப்புகள் இருந்தால் பூசி விடவும்.
சிலந்தியை விரட்ட கிராம்பு, புதினா, வெங்காயம், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோலையும் பயன்படுத்தலாம். சிலந்தி வரும் இடங்களில் இவற்றை வைத்துவிடவும். இல்லையேல், இவற்றினால் ஸ்பிரே தயாரித்து தெளிக்கலாம்.

வீட்டை தினமும் துடைத்து சுத்தமாக வைத்திருப்போம். ஆனால், சுவற்றை துடைக்க மாட்டோம். வாரத்தில் மூன்று நாளாவது துணி அல்லது துடைப்பம் கொண்டு சுவற்றை சுத்தம் செய்வது நல்லது.
பெண்களே, சிலந்திகளை விரட்ட நாங்கள் பகிர்ந்த இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். வேறு ஏதாவது குறிப்புதவி உங்களுக்கு வேண்டுமெனில், தயவுசெய்து அதனை கமெண்டில் தெரிவிக்கவும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், லைக் செய்யவும், ஷேர் செய்யவும், கமெண்ட் செய்யவும். மேலும், ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com